தலைப்பு

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

பர்த்தியிலே வந்த கங்கை!இது தான்  சித்ராவதி;
பர்த்தியின் இனிய இளவரசி;
துளித்துளியாய் ஒளிரும் நீரோடை;
கரை புரளா ஆனந்த நீரோடை;

சொர்க்கத்திலிருந்து வருமே புனித மழை;
சாயி தந்தை அனுப்ப சேர்ந்த மழை;
உருண்டு திரண்டு உயர்வாள் அவள்;
உற்சாக ஓட்டம் துவங்குவாள் உடன்;


ஓடுகையில் அழகு பதுமையவள்;
மூழ்கி எழ ஆனந்தம் பயப்பாள் அவள்;
மந்திர ஜபம் கரையில் மணிக்கணக்காய்,
செய்ய சேருவார் ஸாயி நம் அருகில்.


 இறைவற்கெலாம் இறை பர்த்தி ஸாயி,
தெரிந்தெடுத்த அவள் ஓர் புண்ய நதி!
பக்தியின் நினைவுகளை சொந்தமாக்கி,
பாபாவின் பரிசு விரிப்பாள் அவர் சக்தி;

பாவங்களை தொலைத்திடுவோம் சித்ராவதியில் மூழ்கி; 
பணிந்து இறைஞ்சுவோம் ஸாயி திருவடி பேறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக