தலைப்பு

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

பிரசாந்தி நிலையத்தில் ஆன்லைன் மூலமாக அறை முன்பதிவு செய்வது எப்படி?


பிரசாந்தி நிலையத்தில் ஆன்லைன் மூலமாக அறை முன்பதிவு செய்வது எப்படி? ஒரு வழிகாட்டி.

ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்ய கீழ்கண்ட இணையதளத்தை உபயோகிக்கவும்: www.prasanthinilayam.in

தற்போது இந்த இணையதளத்தின் மூலம் இரண்டு வகையான அறைகள் மட்டும், இருப்பை கொண்டு, முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்ய முடியும்.


1. படுக்கை வசதி கொண்ட அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ. 300/- (வரிகள் உட்பட)

2. படுக்கை வசதி மற்றும் குளிக்க சுடுதண்ணீர் வசதியிடம் ஒரு அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ. 350/- (வரிகள் உற்பட)
அறைகளின் இருப்பை அறிந்துகொள்ளவும், முன்பதிவு செய்யவும் ஒரு User ID வேண்டும்.

  • New user என்பதை கிளிக் செய்து User IDயை உருவாக்கவும்.
  • தேவைப்படும் தகவல்களை அளிக்கவும், பின் உங்கள் இமெயிலுக்கு அனுப்பப்படும் லிங்கை (activation link) சொடுக்கி உங்கள் புது கணக்கை (user ID) செயல்படுத்துவீர்.
  • உங்கள் சொந்த தகவல்களை, அதாவது, உங்கள் முகவரி, புகைப்படம் போன்ற முக்கிய தகவல்களை அளித்து பூர்த்தி செய்யவும். அதன் பின் முன்பதிவு செய்யவும்.
  • வெற்றிகரமாக முன்பதிவு செய்தபின், உங்களுக்கு அறையை உறுதி செய்து ஒரு இமெயில் வரும். அதனை நீங்கள் பிரசாந்தி செல்லும் போது 'ரிசர்வேஷன் கவுண்டர்'ல் வழங்க வேண்டும்.
  • யாருடைய user id உபயோகப்படுத்தி அறை முன்பதிவு செய்யப்பட்டதோ (the lead member), அவர் நிச்சயமாக அறைகளில் தங்கும் குழுவினரில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • இணையதளத்தில் நுழைந்தவுடன், Profile பகுதியில் முன்பதிவு செய்பவர் உடன் வருகை தரும் தங்கள் குடும்பத்தினரின் விபரங்களை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த வசதியின் மூலம், அறை முன்பதிவு செய்யும் போது அந்த பட்டியலில் இருந்து தம்முடன் பயணம் செய்பவர்/தங்குபவர் பெயரை எடுத்துக்கொள்ளலாம்.
  • இரண்டுக்கும் குறைவானவர்களுக்கு, அதாவது தனியாக வருபவர்களுக்கு அறை வழங்க இயலாததால், முன்பதிவும் செய்ய இயலாது.
  • ஒரு அறையில், ஒரு குடும்பத்தை சேர்ந்த, குறைந்தபட்சம் 2,  அதிகபட்சம் 3 நபர்கள் இருக்க வேண்டும்.
  • 4 வயத்திற்குட்பட்ட, அதிகபட்சம் 2 குழந்தைகள் கட்டணமின்றி பெரியோர்களுடன் தங்கலாம்.
  • ஒரு அறையானது, அதிகபட்சம் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
  • 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம்.
  • முன்பதிவு செய்ய வங்கி கணக்கின் (online banking) மூலம் அல்லது கிரெடிட் கார்ட்/டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தலாம்.
  • தற்போது, இந்த இணையதளத்தில் முன்பதிவை ரத்து செய்தல் (Cancellation)/பணத்தை திரும்ப அளித்தல் (Refund) வசதி வழங்கப்படவில்லை.
  • எனவே, பக்தர்கள், பிரசாந்தி நிலையத்திற்கு தங்கள் பயணம் உறுதியானால் மட்டும் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜெய் சாய்ராம்! 
mnv_mdu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக