தலைப்பு

வியாழன், 5 செப்டம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயியை இறைவன் என உணர்ந்து உரைத்த காஞ்சி பெரியவர்!


இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் சிவசக்தி அம்சத்தை பக்தர்களுக்கு உணர்த்திய காஞ்சி பெரியவர் கூறிய சர்வ ஆதாரப் பதிவுகள் இதோ. ஸ்ரீ சத்ய சாயிபாபாவை குறித்து பலமுறை பல பக்தர்களிடம் சத்ய சாயியே சாட்சாத் காமாட்சி என்றும் .. புட்டபர்த்தியே திருப்பதி என்றும்.. ஸ்ரீ சத்ய சாயியே சிவ சொரூபம் எனும் பரம ரகசியத்தையும் மொழிந்திருக்கிறார். அதன் பரவச பதிவுகள் இதோ...  


1) M.S சுப்புலட்சுமி அம்மாவின் சத்ய சாயி அனுபவங்கள்!


பாகம் 1: https://bit.ly/2RTu5Dk

பாகம் 2: https://bit.ly/2zfn9Kf

மேலும் ஸ்ரீ சத்ய சாய்பாபா உடனான எம் எஸ் அம்மாவின் அனுபவத்தை விரிவாக தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோவை பார்க்கவும்...






2) 'தெய்வத்தின் குரல்' ஆசிரியர் ரா. கணபதி:


காஞ்சி மகா பெரியவா பக்தர்களுக்கு பரிச்சயமான பெயர் திரு. ரா. கணபதி அவர்கள். இவர் காஞ்சி பெரியவரின் முக்கிய புத்தகமாக கருதப்படும் 'தெய்வத்தின் குரல்' என்ற புத்தகத்தை எழுதியவர் இவரே. மேலும் ரா கணபதி அவர்கள் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கும் போது, புட்டபர்த்திக்கு போகும்போதெல்லாம் பாபா, காஞ்சிப் பெரியவரை பற்றி நலம் விசாரிப்பார். அதேபோல், தான் புட்டபர்த்தியிலிருந்து காஞ்சி மடத்திற்கு வரும்போதெல்லாம் பெரியவா பாபாவைப் பற்றி கேட்பார் என்று தன்னுடைய அனுபவத்தை  பகிர்ந்துள்ளார். ரா.கணபதி அவர்கள் பகவான் சத்ய சாய் பாபாவை பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க புத்தகமான 'சுவாமி'  என்ற புத்தகத்தில் அவர் எண்ணற்ற பாபாவின் மெய்சிலிர்க்கும் அற்புதங்களை பதிவு செய்துள்ளார். சத்ய சாயி பாபாவின் அற்புதங்களை விரிவாக படிக்க விரும்பும் அன்பர்கள் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.


மேலும் ஸ்ரீ சத்ய சாய்பாபா உடனான ரா. கணபதி அவர்களின் அனுபவத்தை விரிவாக தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோவை பார்க்கவும்...





3) ரா. கணபதி அவர்களின் சித்தப்பா மகன் திரு. துரைசுவாமி அவர்களின் சத்ய சாயி அனுபவம்:

கீழ்காணும் ஆடியோ பதிவில் காஞ்சி மகா பெரியவர் எப்படி ரா. கணபதியின் தந்தையாரை பாபாவிடம் அழைத்துப்போக சொன்னார் என்பதை பற்றியும், மேலும் அவர்கள் புட்டபர்த்திக்கு சென்ற பிறகு நடந்த சுவாரசிய சம்பவங்களை பற்றியும் திரு. துரைசுவாமி அவர்கள் அவரது நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
👇👇



4) சென்னையை சேர்ந்த மூத்த சாயி பக்தர் திரு.  கிட்டப்பா(83 years) அவர்களின் சத்ய சாயி அனுபவம்:


தன்னுடைய வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோய் எவ்வாறு குணமானது என்பதைப் பற்றியும்...  ஒருமுறை காஞ்சி மகா பெரியவரிடம் தான் சாயி சேவையில் ஈடுபடப்போவதாக சொன்னதற்கு.. மகா பெரியவர் போய் அந்த சடையனுக்கு நிறைய சேவை செய் என்று ஆசீர்வதித்துதாகவும், சடையன் என்ற அந்தப் பெயரில் உள்ள உட்பொருளைப் பற்றியும்... தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களாக இதோ மனமுருக  பகிர்ந்திருக்கிறார் இந்த மூத்த சாயி பக்தர்... 
👇👇



5) சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சீனிவாச அய்யங்கார் அவர்களின் சாயி அனுபவம்:



அதேபோல் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சீனிவாச அய்யங்கார் என்ற ஒரு அன்பர், காஞ்சி மடத்திற்கு அடிக்கடி சென்று மகா பெரியவாவிடம் ஆலோசனை கேட்டு வருவார்.  அவர் ஒருமுறை  புட்டபர்த்திக்கு தன் நண்பரோடு சென்றிருந்தார். சென்றவருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். பாபா அவருக்கும், அவர் நண்பருக்கும் சேர்த்து நேர்காணல் கொடுத்தார். நேர்காணலில் அவர் குடும்ப கதை எல்லாம் பேசி முடித்த பிறகு கடைசியாக பாபா ஒரு மாங்கனியை  ஸ்ருஷ்டித்து  ஐயங்காரிடம் கொடுத்தார். பின்னர் 'நீங்கள் இங்கிருந்து நேராக காஞ்சி மடத்திற்கு செல்கிறீர்கள் அல்லவா?' என்ற ஐயங்காரிடம் கேட்டார். அதற்கு அவர் ஆம் சுவாமி என்று பதில் உரைக்க, போய் இந்த மாங்கனியை உங்கள் பெரியவரிடம் கொண்டு போய் சேருங்கள் என்று கொடுத்து அனுப்பினார். பின்னர் அவரும் காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த சமயத்தில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அவரும் ஒரு வரிசையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது பெரியவரின் சிஷ்யர் ஒருவர் உங்களை  பெரியவா அழைக்கிறார் வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்றார்.


உள்ளே சென்ற உடனே பெரியவா 'எங்கே அந்த மரகத அம்பாள்' என்று கேட்டார். ஐயங்காருக்கு ஒன்றும் புரியவில்லை.  உடனே காஞ்சி பெரியவர் கையை மாங்கனியை போல் செய்து காண்பிக்க ஒரு வழியாக ஐயங்காருக்கு புரிந்தது.  உடனே தன் கையில் இருந்த மாங்கனியை பெரியவரிடம் கொடுத்து நமஸ்காரம் செய்து கொண்டார். பெரியவா அருகில் இருந்த ஒரு சிஷ்யனிடம் கொடுத்து இந்த மாங்கனியை சரிபாதியாக வெட்டுமாறு கேட்டுக்கொண்டார். அந்த சிஷ்யர் ஒரு கத்தியால் அந்த மாங்கனியை சரிபாதியாக வெட்ட உள்ளே பார்த்தால் மாங்கொட்டைக்கு பதிலாக ஒரு சின்ன அளவில் பளபளக்கும் மரகத அம்பாள் விக்கிரகம். அப்போதுதான் ஐயங்காருக்கு எல்லாம் தெளிவாக புரிந்தது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி அவர் விரிவாக பெரியவரிடம் கேட்ட போது பெரியவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக ஐயங்காருக்கு மாங்கனியில் பாதியை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.


6) இறைவன் சத்ய சாயியை காஞ்சி காமாட்சி என உரைத்த காஞ்சிப் பெரியவர்:

திரு. ரவிச்சந்திரன் சாய்ராம் அவர்கள் சென்னை கட்டுமானத் துறையில் பணியும் சாயி பக்தர் .. சிறந்த சேவாதளத் தொண்டர்.. அவருக்கு புட்டபர்த்தியில் நேரடியாய் நிகழ்ந்த அனுபவம் இது...

திரு. ரவிச்சந்திரன் சாய்ராம்

ஒருமுறை 1992 -93ல் பர்த்தி தரிசனத்தில் ரவி சாய்ராம் அமர்ந்திருக்க .. சுவாமி வேறெங்கும் செல்லாமல் நேரடியாய் இவர் முன் நின்றிருக்கிறார்...
ரவி சாய்ராமுக்கு பதட்டத்தில் வேர்த்து கொட்டுகிறது..

பிறகு சுவாமி ரவி சாய்ராம் பின் அமர்ந்திருந்தவரை நோக்கி

நான் தான் காஞ்சிபுரத்திலேயே உன்ன பாத்துக்கறேனே அப்பறம் இங்க ஏன் வந்த? எனக் கேட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்.

மொழியற்றுப் போன அவர் கண்களில் நீர் ததும்ப செய்கையற்று நின்றிருக்கிறார்.

ரவி சாய்ராம் விசாரிக்கிறார்..

சிறிது நேரம் பேச்சற்றுப் போய் பின்னால் அமர்ந்த அவர் தன் அனுபவம் பகிர்கிறார்.

அவர் காஞ்சிபுரவாசி.. காஞ்சிமடத்திற்குப் போய் வருபவர்.
காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிக்கு மிகுந்த நெருக்கமானவர். வேண்டியவர்.


இவர் அந்த மகா பெரியவரிடம் தான் பாபாவை தரிசிக்கச் செல்ல வேண்டும் அதற்கு தாங்கள் உத்தரவு தர வேண்டும் என மூன்று ஆண்டுகளாக வேண்டுகிறார்.. பெரியவரோ இப்போ வேண்டாம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்..

மூன்றாம் ஆண்டு எப்படியாவது புட்டபர்த்தி வந்து சுவாமியை தரிசித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டி மகா பெரியவரிடம் உத்தரவு கேட்க அத் துறவோ..
சற்று குரலை உயர்த்தி .. எதுக்கு நீ அங்க போகணும்னு நெனைக்கிற எனக் கேட்கிறார்..

இல்ல பெரியவா எல்லாரும் அவரப் போய் தரிசனம் பண்றா அதான் போலாமேன்னு
என பவ்யமாய் தலை குனிந்து பேசுகிறார்

அதற்கு மகா பெரியவரோ

அவர் யாருன்னு உனக்கு தெரியுமா?

என கேள்வி எழுப்ப..

பதிலற்று பெரியவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்..

அவர் தான் நம்ம காஞ்சிபுரத்துல இருக்கிற சாக்ஷாத் காமாட்சி அம்பாள்..
அவ தான் உன்ன இங்கயே நல்ல பாத்துக்கறாளே .. நீ அங்க ஏன் போகணும் ? அதான் வேணாம் னு சொன்னேன் என்றிருக்கிறார்..

அதையும் மீறி சுவாமியை தரிசிக்க பர்த்தி வந்த அவரைப் பார்த்து மகா பெரியவர் கேட்ட அதே கேள்வியை நம் மகா கடவுள் கேட்க..

இவரோ பேச்சு மூச்சற்று விழியில் நீர் ததும்ப ரவி சாய்ராமிடம் சொல்லி முடிக்க..

அடியேனுக்கும் உடம்பு சிலிர்த்தது..
இதை நேரடியாய் அனுபவிக்கும் பாக்கியம் ரவி சாய்ராமுக்கும்.. அவரிடமிருந்து கேட்கும் பாக்கியம் அடியேனுக்கும்..


(நேர்காணலை தொகுத்தளித்தவர்: கவிஞர் வைரபாரதி)




7) 'ஸ்ரீ சத்ய சாயி நாமம்' பற்றி காஞ்சி மகாபெரியவர் | M.S சுப்புலட்சுமி அம்மையாரின் மகள் ராதா விஸ்வநாதன்


8) பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா & காஞ்சி மகா பெரியவர் பற்றி ஓர் அரிய சம்பவம்! 
ஆதாரம்: 15-11-2018 அன்று ஒளிபரப்பப்பட்ட ரேடியோ சாய் ஆங்கில சத்சங்கம்


காஞ்சி மகா பெரியவரும், பகவான் பாபாவும் ஒருபோதும் நேருக்கு நேராக சந்தித்ததே கிடையாது. அவர்களின் தெய்வீக பந்தம், நம் சராசரி கண்களுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் பார்க்காமலே இருந்த இடத்திலிருந்து கொண்டே பேசி கொள்கிறார்கள் என்று நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது நமக்கு தெளிவாக புலப்படுகிறது.

இப்படி எண்ணற்ற மகான்களும், முனிவர்களும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பகவானை தரிசித்து கொள்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் ஒருசில பக்தர்களுக்கு இது போன்று அனுபவங்கள் கிட்டியுள்ளது. அதாவது இரவு நேரங்களில் தேவதைகளும், முனிவர்களும் வந்து போவதுபோல் அவர்கள் கண்டிருக்கிறார்கள். சில புத்தகங்களில் அவர்கள் அந்த அனுபவத்தைப் பற்றிக் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.



🎶முழுதாய் உணர்ந்தவர்  யாரோ சாயி - M.S. சுப்புலட்சுமி

இந்த வீடியோவானது M.S சுப்புலட்சுமி அம்மையாரும் அவரது கணவர் திரு. சதாசிவம் அவர்களும் இணைந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆரத்தி பாடலை அவர்களது வீட்டு பூஜை அறையில் மெய்மறந்து பாடிய போது பதிவு செய்யப்பட்டது. மேலும் நீங்கள் இந்த வீடியோவின் ஆரம்பத்தில் அவர்களது விட்டு ஹாலின் சுவற்றில் பகவான் பாபா இரண்டு கைகளால் ஆசீர்வாதம் செய்யும் புகைப்படம் ஒன்று மாட்டியிருப்பதை உற்று பார்த்தால் பாதி தென்படும்.

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் முன்னிலையில் M.S சுப்புலட்சுமி அம்மையார் பேசிய போது...