தலைப்பு

வியாழன், 26 செப்டம்பர், 2019

கடவுளை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்!


ஒரு சிலர் தங்களின் சுயநல ஆசைக்காக, அகில அண்டத்தையும் படைத்தவனிடம் விளையாடுகிறோம் என்று தெரியாமல் கடவுளையே ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். "உங்களிடம் நேர்மை இருக்கும்போதுதான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கும்" என்று கூறி, பகவான் தனது கதையிலிருந்து ஒரு அத்தியாயத்தை விவரித்தார், கடவுளை ஏமாற்றுவதற்கான முயற்சி மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று முடித்தார் ... அக்டோபர் 19, 1999 அன்று பகவானின் தெய்வீக சொற்பொழிவிலிருந்து..

நான் உரவகொண்டாவில் இருந்து புட்டபர்த்தி திரும்பியபின், சுப்பையா செட்டி மற்றும் கோதண்ட செட்டி என்ற இருமனிதர்கள் அனந்தப்பூரிலிருந்து வந்திருந்தார்கள். இவ்விருவரில் ஒருவர் மகளுக்கு வரன் கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். "என் மகளுக்கு சீக்கிரமே நல்ல வரன் கிடைத்து திருமணம் நடந்தால் தான் நீங்கள் தெய்வம் என்று நம்புவேன்."
என்று என்னிடம் கூறினார். இந்த மாதத்திற்குள் திருமணம் நடந்தால் "சிதிகேளமேதா' ( இதே மாதிரி ஒரு பெரிய மாளிகை) கட்டித் தருகிறேன் என்றார். அனைவரும் இது எது போன்றதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

அவருடைய மகளுக்கு அந்த மாதமே திருமணம் நடந்தது. அவர் பழைய மந்திரிக்கு (கோயிலுக்கு) ஒரு தட்டில் தேங்காய் மற்றும் சில மலர்களுடன் வந்தார். அவர் "சுவாமி,  நீங்கள் என் ஆசையை நிறைவேற்றினீர். இப்போது நான் என் வாக்கை காப்பாற்ற வேண்டும். தங்களுக்கு 'சிதிகேளமேதா' கட்ட எனக்கு அனுமதிஅளியுங்கள்". மற்ற அனைவரும் ஆர்வமாக இந்நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர் 'சிதிகேளமேதா' என்று எதை கட்டப் போகிறார் என்று. சுப்பம்மாவும் 'இவர் சுவாமிக்கு ஒரு பெரிய மாளிகை கட்டித் தரப்போகிறார்'. என்று யோசித்துக் கொண்டிருந்தார். இவருடைய தரம் என்ன என்று எனக்கு நன்றாகவே எனக்குத் தெரியும். சுவாமிக்கு ஆரத்தி எடுத்தவுடன் அவர் சுவாமியிடம் கேட்டார். "சுவாமி இப்போது எனக்கு 'சிதிகேளமேதா' கட்ட அனுமதி கொடுப்பீரா?" பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த 'சரி செய்' என்று கூறினேன். அவர் விரல்களை என்னைச்சுற்றி முறித்துக்கொண்டே 'இது முதல் சுவர்', 'இது இரண்டாவது சுவர்', 'இது மேல்தளம்' என்று சொல்லிக்கொண்டே போனார். இறுதியில் என்னை நமஸ்கரித்து விட்டு 'இவர் கடவுள்' என்று கூறிவிட்டு தேங்காயை உடைத்தார். இதுபோல மக்கள் தங்களை 'அறிவாளி' என்று எண்ணிக்கொண்டு கடவுளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் கடவுளையே ஏமாற்றுகிறார்கள்.
தங்கள் 'செயல்களின் விளைவுகளை' இவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்...


மொழிபெயர்ப்பு: D. காயத்ரி சாய்ராம், காஞ்சிபுரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக