தலைப்பு

புதன், 2 அக்டோபர், 2019

யக்ஞங்களில் திரவியங்களை கொட்டி வீணாக்கலாமா?


 யக்ஞங்களில் திரவியங்களை கொட்டி வீணாக்கலாமா?
நவீன அறிவாளிகளுக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பதில்!


1962ல் இருந்து பிரசாந்தி நிலையத்தில் தசரா சமயத்தில் 7 நாட்கள் தினத்தோறும் ‘வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்’ பகவானின் தெய்வீக வழிகாட்டுதலுடன் துவங்கி இன்று வரை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேத உத்தாரணம் என்பது அவதாரங்களின் முக்கிய பணி என்பது பகவானின் கூற்று. அதனை நிறைவேற்றும் முகமாக பகவான் பல யாக யக்ஞங்களை தனது அவதார காலத்தில் நடத்தியிருக்கிறார் என்பது நாம் அறிவோம்.

2007ம் ஆண்டு பிரசாந்தி நிலையத்திலும், 2009ம் ஆண்டில் சென்னையிலும் பகவான் நடத்திய ‘அதி ருத்ர மஹா யக்ஞம்’ உலகில் பலர் அதனை தங்கள் பகுதிகளில் நடத்த ஊக்கமாக அமைந்தது.
யாக யக்ஞங்களினால் என்ன பயன் என்று அறியாமையின் காரணமாக கேள்வி கேட்போருக்கு பகவான் தசரா சமயங்களில் தனது தெய்வீக பேருரைகளில் விளக்கம் அளித்துள்ளார். இந்த சமயத்தில் அதனை அறிவது நமக்கு யக்ஞகளின் மேல், மேலும் நம்பிக்கை ஊட்டும்.
வாருங்கள், 1989ம் வருடம்  03ம் தேதி பகவான் தனது பேருரையில் கூறிய சில பகுதியினை காண்போம்...


வேள்விகளின் பயன்:

“ஒரு பழமொழி உண்டு, ’நெருப்பை பொறுத்தே புகை இருக்கும்’. புகையைப் பொருத்து மேகங்கள் உருவாகும். மேகங்களைப் பொருத்து மழை பெய்யும். மழையைப் பொருத்து விளைச்சல் அமையும். விளைச்சலைப் பொருத்து உணவு இருக்கும். உணவைப் பொருத்து அறிவாற்றல் அமையும்.
இந்நாளில் வேள்விகளின் (யக்ஞங்களின்) புகையிலிருந்து மேகங்கள் தோன்றாததால் மக்கள் உண்ணும் உணவு அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளது. வேள்விக் குண்டத்திலிருந்து மேலெழும் புகை மேகங்களில் சேரும் போது பெய்யும் மழையும் புனிதமடைந்து விளைச்சலையும் தூய்மைப்படுத்தி உண்ணும் உணவும் புனிதமடைந்து அதனால் மக்களும் புனிதமடைகின்றனர்”


ஒன்று நூறாகும்:

“வேள்விகள் முதலியன நடைபெறாததுதான் இன்று மக்களிடையே தூய்மையற்ற கருத்துக்களும் எண்ணங்களும் பெருகுவதன் காரணம். 
பலர், ‘வேள்வித்தீயில் அதிக அளவில் நெய் மற்றும் பல பொருட்களை அர்பணிப்பதால் என்ன உபயோகம்?’ என்று கேலியாக கேட்கின்றனர். இதில் பொதிந்துள்ள உண்மைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன் முக்கியத்துவம் தெரியும். ஒரு விவசாயி நிலத்தை உழுது பண்படுத்தி ஒரு மூட்டை நெல் விதைகளை அந்த நிலம் முழுவதும் தெளிக்கிறான். இதைப் பார்க்கும் ஒரு அறிவற்றவன் மதிப்புள்ள தானியங்களை இப்படி இரைப்பது வீண் நஷ்டம் என்று கருதுகிறான். ஆனால் விவசாயிக்குத் தெரியும் அதனால் நூறு மூட்டை நெல் அறுவடையாகும் என்று. இதைப் போலவே விலை மதிப்புள்ள பொருட்களையும் நெல்லையும் யக்ஞத்தில் மந்திரங்களின் முழக்கத்தோடு அர்ப்பணிப்பது காலப்போக்கில் பலவித நன்மைகளைத் தரும். மக்கள் அர்ப்பணிப்பதை மட்டும் பார்க்கிறார்கள். அதந் மூலம் தொடர்ந்து கிடைக்கும் பலன்களை அவர்கள் அறியமாட்டார்கள்.
இன்றைய தியாகமே நாளைய போகம் (அனுபவித்தல்) என்பதை உணர வேண்டும். முழு மனதோடு பொருட்களை அர்ப்பணம் செய்தால் அதன் பலன்களும் அதிகமாகவே இருக்கும்”.ஜெய் சாய்ராம்!
(mnv_mdu)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக