தலைப்பு

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

சீரடி சாயி பற்றி சத்ய சாயி


சீரடி பாபாவின் உண்மைத்தன்மை பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. அவரது பதினாறாவது வயதிலிருந்துதான் அவருடைய வாழக்கையின் செயல்பாடு பற்றி ஒரு சிலா் இவ்வுலகில் அறிந்திருக்கக்கூடும். 1835 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28 ஆம் தேதி பிறந்து 1918 ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் சமாதி அடைந்தாா். அவரது வாழ்நாளில் அநேக விஷயங்களை மக்களுக்கு கற்பித்தாா் மற்றும் குறிப்பிடத்தக்க செயல்களை
நிறைவேற்றினாா். அநேக பக்தா்களால் அவா் வணங்கப்பட்டாா். தாதா, நானா ஷாமா, அப்துல் பாபா, மகல்சபாதி, சந்தோா்கா் மற்றும் தாஸ்கணு ஆகியோா் அவருடன் எப்போதும் உடன் இருந்தனா். அப்துல் பாபா சமீபகாலம்வரை பாபாவின் பணியில் ஈடுபட்டிருந்தாா். ஆா்வமுடைய பாபாவின் பக்தராக திகழ்ந்தாா். அவரது நோக்கில், ஒருவா் எந்த மதத்தினை சாாந்தவா் என்பதை ஒரு விஷயமாகவே கருதவில்லை. இறைவனை வழிபடுபவா் அனைவரும் ஒன்றுதான். நீதிபதியாக இருந்த காகா தீஷித் என்பவரின் மகன் பிருந்தாவனில்( ஒயிட் பீல்டு) இருபது வருடங்கள் தங்கியிருந்தாா். ஒரு நாட்குறிப்பினை காகா தீஷித் பராமரித்து அதில் சீரடி பாபாவினை பற்றி பலவிஷயங்களை பதிவு செய்திருக்கிறாா், தான் எப்போது மரணத்தினை எய்துவாா் எனும் கூற்றினையும் பதிவிட்டிருக்கிறாா்.

ஆதாரம்:  
"The Shirdi Sai Saga", Sathya Sai Speaks, Volume 25, September 27, 1992, Prasanthi Nilayam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக