தலைப்பு

புதன், 25 செப்டம்பர், 2019

கேன்சருக்கு பகவான் கனவில் சொன்ன 'காபி' வைத்தியம்!


ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரியை  சேர்ந்த சுஜாதா என்ற பெண்மணி சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தை. அவருடைய கணவரோ பாபா மீது நம்பிக்கை இல்லாதவர். அவர் துபாயில் வேலை செய்து வந்தார். 1987இல் அவருக்கு உடல் நலம் குன்றியது. அதனால் துபாய் கம்பெனிகாரர்கள் அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைத்தார்கள். இந்தியா வந்த அவர்,
ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் தன்னுடைய உடலை காண்பித்தார். பின்பு ஒரு வாரம் கழித்து அவருடைய மருத்துவ அறிக்கை வந்தது. அதில் அவருடைய வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. அதுவும் முற்றிய நிலையில் இருந்ததால் டாக்டர்கள் கை விரித்தார்கள். பின்பு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கணவன் மனைவி இருவரும் புட்டபர்த்திக்கு செல்ல முடிவு செய்தார்கள். புறப்படுவதற்கு முன் தினம் பகவான் அந்த பெண்மணியின் கனவில் தோன்றி 'உன் கணவருக்கு தொடர்ந்து தினமும் 2 கப் காபி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கொடு' என்று சொன்னார்.  இந்த செய்தியை மட்டும் பாபா சொல்லி அவருடைய கனவில் இருந்து மறைந்து விட்டார்.

மறுநாள் காலை சுவாமி சொன்ன விஷயத்தை தன்னுடைய கணவருக்கு சொன்னார். கணவரோ உடல் நலம் குன்றிய நிலையிலும் மூக்குக்கு மேல் கோபம் வந்தது. உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா காப்பிக்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம். 'காலையில் அரைக் கப் காபி குடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது அப்படி இருக்கும்போது 2 கப் காபி எப்படி என்னால் குடிக்க முடியும்' என்று மறுத்துவிட்டார். அந்தப் பெண்மணியோ விடாமல் இரண்டு நாள் உண்ணாவிரதம் இருந்து கடைசியாக கணவனை சம்மதிக்க வைத்தாள். அவரும் காப்பி வைத்தியத்தை ஒரு மாதம் தொடர்ந்து  உட்கொண்டார். பின்பு இரண்டு வாரம் கழித்து அவருடைய ஐதராபாத் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. வெளிநாட்டில் இருந்து ஒரு டாக்டர் வந்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அவரை சந்தித்து  கேன்சருக்கு ஏதேனும் தீர்வு கிடைக்கும் என்று நம்பி கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சென்றார்கள்.  மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனைகள் நடந்தது. முடிவில் அவருக்கு கேன்சர் இல்லை என்று அறிக்கை வந்தது.

இறுதியாக அவர் பாபாவின் மீது நம்பிக்கை கொண்டார். பின்னர் கணவன் மனைவி இருவரும் பாபாவுக்கு நன்றி தெரிவிக்க புட்டபர்த்திக்கு சென்றார்கள். பாபாவும் அவர்களுக்கு பேட்டி கொடுத்தார். பேட்டியின்போது  கனவில் கூறிய வைத்தியத்தை நினைவுகூர்ந்து 'உண்மையில் காப்பிக்கும் கேன்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களுக்கான தீர்வை நான் காப்பியின் மூலம் கொடுத்தேன்' என்று தான் குணப்படுத்தியதை உறுதிப்படுத்தினார்.

ஆதாரம் : 1996 நவம்பரில் வெளிவந்த 'கல்கி' வார இதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக