தலைப்பு

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயிபாபா கிருஷ்ணரின் அவதாரம்!

புட்டபர்த்தியில், முஸ்லிம் அன்பர்களுக்காக பாபா தர்க்கா கட்டிக்கொடுத்தார். "மெஹத்தி மெவுட்' என்ற அரேபிய புத்தகத்தில், தீர்க்க தரிசி மொகமத்," சாய்பாபாவின் கடைசி ஒன்பது வருடங்களில் தான் இவரை புரிந்துகொள்வார்கள்' என்றார். கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் "நாஸ்டர்தாம்ஸ் என்ற தீர்க்க தரிசி, "இந்தியாவின் தெற்கு பகுதியில் ஞானஸ்வரூபியாக ஒருவர் வந்துபிறப்பார்; மொத்த உலகத்தையும் வழிநடத்துவார்' என்று செஞ்சுரீஸ் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். 


பாண்டிச்சேரியில் 1926ம் ஆண்டு ஆக., மாதம் 15ம் தேதி அரவிந்தர் தனது 53வது பிறந்த நாள் உரையாற்றும் போது, "நானும் இமயமலையில் உள்ள முனிவர்களும் சேர்ந்து பிரார்த்தனை செய்து, சரியாக 100வது நாளில், ஸ்ரீகிருஷ்ணரை <உலகத்திற்கு கொண்டு வருவோம்' என்றார். அதேபோன்று, 100வது நாள் (நவ., 23ம் தேதி) பாபா அவதரித்தார். நவ., 24ம் தேதி பேசிய அரவிந்தர், "இனி என் சொந்த ஆன்மிக வளர்ச்சிக்காக செல்லப்போகிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் மானிடரூபத்தில் இறங்கிவிட்டார்' என்று சொல்லி யிருக்கிறார். பல வெளிநாட்டவர் இவரை ஏசு என்றே போற்றி வருகின்றனர். தம் புராணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பெயர்பெற்ற வில்ஸன். வியாசர் எழுதிய பத்மபுராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அதில், "இந்தியாவின் தெற்கே ஒரு வசீகர காந்தம் வந்துதிக்கும். புட்டபர்த்தி என்ற கிராமத்திலே பிறந்து, உலகில் உள்ள பலரையும் தன்னிடம் இழுத்து நல் வழிகாட்டும்' என்று எழுதியிருக்கிறார். விவேகானந்தர் தனது பக்தியோகத்தில் இந்தியாவில், சத்யம் வந்து பிறக்கும். அவரை சத்யம், சிவம், சுந்தரம்' என்று கூறலாம்' என்று எழுதியுள்ளார்.


சுகர், சுக்கிர, அகஸ்தியர், பிறகு புத்தநாடி ஓலைச்சுவடிகளிலும் இவரை பற்றி தீர்க்க தரிசனங்கள் உள்ளன. எல்லா கடவுளின் ஒட்டுமொத்த அவதாரம் ஸ்ரீசத்ய சாயி அவதாரம். நோய்களை தன்மேல் வருத்திக்கொண்டு சாயிபாபா பக்தர்களை காப்பார். கலி முத்தும்போது, இவரது புகழ் கூடிக்கொண்டே இருக்கும். சீரடி சாய்பாபாவின் அவதாரமாகிய இவர், அதற்கு பிறகும் ஒரு அவதாரம் எடுப்பார். பிரேமசாய் பாபாவாக பல விசித்திரமான அற்புதங்களை இவர் செய்வார். வயதுக்கேற்ற முதுமையை அடையமாட்டார்; ஆனந்தஸ்வரூபி; பல மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து வைப்பார். ஒரேசமயத்தில் பல இடங்களில் காட்சி தருவார். இவர் வஜ்ர சங்கல்பி எதை நினைத்தாரோ, அதை நடத்திக் காட்டுவார். 


ஆதாரம்: அக்டோபர் 08,2010 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக