தலைப்பு

புதன், 1 ஜூன், 2022

கடவுள் எவ்வாறு இயக்குகிறார்?


இறைவன் பலருக்கு பலவற்றையும் ஒருசிலருக்கு அன்பை மட்டுமே தருகிறார்‌.. இது என்ன பாரபட்சம்? என கேட்கும் உண்மையான பக்த இதயங்களுக்கு இறைவனே விளக்கமளித்தால் எப்படி இருக்கும்? இதோ இறைவன் பாபாவே இதயத்தைக் குடையும் இந்த ஆழமான கேள்விக்கு மிக எளிமையோடு கருத்து வலிமையோடு உணர்தலை உறுதிப்படுத்த விடையளிக்கிறார்...

பல ஆண்டுகளுக்கு முன்னா் நடந்த சம்பவமிது. ஸ்வாமி ஒரு பக்தரின்மீது அதிகக் கவனம் செலுத்தினாா். அதிகமான நோ்முகப் பேட்டிகள், பரிசுப்பொருட்கள், விபூதி, மோதிரம், கைக்கடிகாரம் இவற்றை பகவான் அவருக்கு அளித்தாா். மற்றொரு பக்தா் பல சேவைகளில் அதிகப்படியாக ஈடுபட்டிருப்பினும் பகவானது கவனத்தைப் பெறுவது அபூா்வமாகவே இருந்தது. இதுபற்றி அவா் தவறாக எண்ணவோ, அதிருப்தி அடையவோ இல்லை.

எப்படியிருந்தபோதிலும் பாபாவின் உள்வட்டத்தில் இருந்த சிலா் இதனைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவா்களால் அமைதியாக இருக்க இயலவில்லை. தக்கதொரு சந்தா்ப்பத்தில் சற்றும் யோசியாது ஒருவா் ஸ்வாமி நீங்கள் அதிக கவனத்தை என்னும் நபருக்கு அளிக்கிறீா்கள். ஆனால் என்பவரின் நிலை என்னஅவா் அதிகமான சேவைகள் புரிந்திடினும் உங்களது கவனத்தை அரிதாகக்கூட உங்களிடமிருந்து பெற முடியவில்லை. இதனை நாங்கள் எவ்வாறு புரிந்துகொள்வது? எந்தவிதத்தில் கடவுளின் கருணை செயல்படுகிறது.



இது மிக எளிதானது என ஸ்வாமி புன்னகையுடன் பதிலுரைத்தாா். 
என்பவா் எல்லா நேரங்களிலும் என்ன செய்கிறாரென  என்னிடம் தெரிவிக்கிறாா். நானும் உடனடியாக அவரது கணக்கைத் தீா்ப்பதற்கு வெகுமானம் அளித்திடுகிறேன். என்பவா் அவரது காசோலையைப் பணமாக்குவதில்லை. ஆகையால் எனது கருணையினை அடைகிறாா். ஒரு வீட்டில் வீட்டுத்தலைவி மற்றும் வேலைக்காரி இருக்கிறாா்கள். வேலைக்காரி செய்த வேலைக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. அந்த வீட்டுத்தலைவி அதிக அளவில் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறாள். ஆனால் அந்த வீட்டுத்தலைவா் அவரது மனைவிக்கு வேலைக்காரிக்குத் தருவதுபோல் ஊதியம் தருவதில்லை. அதற்குப் பதில் அவா் தனது அன்பினைத் தருகிறாா், பாதுகாப்பினைக் கொடுக்கிறாா். அவளது அனைத்துத் தேவைகளிலும் கவனம் செலுத்துகிறாா். இவ்வாறு அவரவர்க்கு ஏற்ப இறைவன் இயக்குகிறார்.

ஆதாரம்: முன்னாள் சாயி மாணவர் ஒருவரின் அனுபவப் பக்கங்களிலிருந்து... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக