தலைப்பு

வெள்ளி, 16 ஜூன், 2023

"உலக சாதனை புரிந்தது எப்படி?" - ஸ்ரீ சத்ய சாயிபாபா பற்றி மனம் திறக்கிறார் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்!

களத்தில் சாதனையும் வாழ்க்கையில் வளமையும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து தூள் கிளப்ப வைத்து "பாரத ரத்னா"வாக திகழ வைத்திருக்கும் தனது பேரிறைவன் பாபா பற்றி மனம் திறக்கிறார் சச்சின்... இவரோடு கவாஸ்கர், அர்ஜுன ரனதுங்கா, V.V.S லஷ்மண் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பாபா பற்றி பகிரும் சுவாரஸ்யம் அரிய காணொளியாக இதோ...!


ஆதாரம்: Sri Sathya Sai Official, TIMES NOW, NDTV & Sachin: A Billion Dreams


கிரிக்கெட்டால் பலர் பிரபலம் ஆனார்கள், ஆனால் கிரிக்கெட்டே பிரபலம் ஆனது சச்சின் டெண்டுல்கரால்தான். இது புகழுரை அல்ல.. இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான். இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் ஏராளம். சச்சின் மிகவும் தீவிரமான ஸ்ரீ சத்ய சாய்பாபா பக்தர் ஆவார். கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இந்தியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புட்டபர்த்தி ஸ்டேடியத்தில் நடை பெற்றது. அப்போது இந்திய லெவன் அணிக்கு சச்சின் தலைமை தாங்கினார். அன்று முதல் அவர் தீவிர ஸ்ரீ சத்ய சாய்பாபா பக்தரானார். அடிக்கடி புட்டபர்த்திக்கு வந்து  பாபாவை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். பாபாவின் தனிப்பெரும் அருளால் சச்சின் தொழில் வாழ்க்கையும் , பெயரும் புகழும் சிக்ஸராய் ஆகாயம் வரை நீண்டது!  ஸ்டேடியத்தை தாண்டும் பந்து போல் அவரது விளையாட்டு சாகசம் தேசம் தாண்டிச் சென்றது! உலக இதயங்களை வென்றது! பாரத ரத்னா விருது வரை அது அவருக்கு ஈன்றது! 
அதற்கு காரணம் பேரிறைவன் பாபா என்பதை அவரும் மறக்கவில்லை! இன்றளவும் அதற்கு செய்நன்றியோடு தனது வாழ்க்கையை பாபா பக்தியாய் வாழ்ந்து வருகிற உன்னத மனசுக்காரர் சச்சின் டெண்டுல்கர்!









1 கருத்து: