தலைப்பு

செவ்வாய், 6 ஜூன், 2023

படித்து நிறைய சம்பாதிப்பவர் சர்வ சாதாரணமாக பணம், நேரம், சக்தி இவற்றை வீணடிக்கிறார்களே?

 அப்படிப்பட்ட காலத்தை வீணாகப் பயன்படுத்துவது பாவம் ஆகும்! எப்படிப்பட்டவராக இருந்தாலும் நேரத்தைக் கடைபிடிக்க வேண்டுமே தவிர , நேரம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.... காலத்தின் அதிபதி கடவுள்! அந்த கடவுளுக்கே கட்டுப்பட்டது காலம்! 

Time waste is life waste

Haste makes Waste 

Waste makes worry 

So Don't be in a Hurry 

புனிதமான காரியங்களை செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் உடலையும் உங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தையும் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்! நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்? எதனால்? ஏனெனில்... காலமே கடவுள்!


அடுத்தது பணம்... Waste of money is evil... பணத்தை வீணாகப் பயன்படுத்தக் கூடாது! More Money makes More Wrong things! அதிகப்படியான பணம் இருந்தால் ஒருவன் தீய குணங்களுக்கு ஆட்படுவான்! படித்து சம்பாதிப்பவர்கள் அவர்களின் பணத்தை சமுதாய சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டும்! 

உங்களை இந்த அளவிற்கு மேன்மை அடையச் செய்து, உங்களை செல்வச் செழிப்பிற்கு காரணமான இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்! 

தியாகம் செய்ய வேண்டும்! 


ந கர்மநா ந ப்ரஜயா தனேன த்யாகே நைகே அமிர்தத்வ மானஸூஹூ

தியாகம் ஒன்றே அமிர்தத்துவத்தை அளிக்க வல்லது!

பணமும் ரத்தமும் எப்போதும் Circulation னில் (ஓட்டத்தில்) இருக்க வேண்டியது அவசியம்! அப்போதே ஆரோக்கியம்!


அடுத்தது சக்தி! இதுவும் தெய்வீகமே! சக்தியை (Energy) வீணாகிப் பயன்படுத்தக் கூடாது! எப்படிப்பட்ட சக்தியாக இருந்தாலும் சரி! 

Water, Current, Food இந்த சக்தியையும் வீணடிக்கக் கூடாது! Food is God! அளவுக்கு அதிகமாக உண்பதும், உணவை வீணடிப்பதும் பாவமே! 

ஒரு வாய் உணவிற்காக தவிப்பவர் இருக்க உணவை வீணடிப்பது கூடவே கூடாது! 

சாப்பிடும் போது எந்த மந்திரம் உச்சரிக்கிறீர்கள்? 

பிரம்மார்ப்பணம் அல்லவா! 

ஆக உணவே இறைவன்! உணவை ஜீரணித்து அதன் சக்தியை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பி வைப்பவர் வைச்வாநரர் (வைஷ்வாநரோ பூத்வா) என்ற அந்த இறைவனே! எனவே உணவை வீணடிப்பது மிகப்பெரிய பாவம்!


ஆசைக்கு உச்சவரம்பு (ceiling on desires) பற்றி கூறி வருகிற போது உணவு, காலம், சக்தி பற்றி அடிக்கடி சுவாமி கூறி வருகிறேன்! பஞ்சபூதங்களை படைத்ததும் இறைவனே! ஆகவே தான் இறைவனை பரமேஸ்வரன் என அழைக்கிறீர்கள்! ஆக அனைத்தையும் இறை ரூபமாக உணர்ந்து நோக்க வேண்டும்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 104)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக