தலைப்பு

செவ்வாய், 6 ஜூன், 2023

"விபூதியே எனது விசிட்டிங் கார்ட்" - பகவான் பாபாவின் அனுகிரக செய்தி!

ஒரு சமயம். பகவான் பாபாவின் திருமுன்னே பல பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அதில் ஒரு மருந்து ஆளுனரும் (Pharmacist) இருந்தார். தமது பவித்ரமான விபூதியின் மகிமை பற்றி பாபா அவருக்கும், உபாத்யா என்கிற மற்றொரு பக்தருக்கும் சுவையுடன் விளக்கியது என்ன? சுவாரஸ்யமாக இதோ...


🌹பிணியுற்றோர் குணமடையும் ஔஷதம் -பாபா விபூதி:

"மருந்துக்கும், இனிப்புக்கும் உள்ள வேற்றுமை என்ன?" பாபாவின் இந்த கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் திணறினார் அந்த மருந்தாளுனர் (Pharmacist). 

புன்னகைத்த பாபா கூறினார். உன்னிடம்  கொஞ்சம் இனிப்பு உள்ளது. ஆனால் அதை பலருக்கு பகிர வேண்டுமெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு முழு இனிப்பை தர இயலாது. ஆனால் அதை விண்டு சிறு சிறு பகுதிகளாக அனைவருக்கும் அளிக்க இயலும். ஆனால் மருந்துகளை அவ்வாறு பகிர்ந்தளிக்க இயலாது. மருத்துவர் குறிப்பிட்ட "டோஸ்" மருந்தகளை, முழுமையாக தந்தால் தான் நோய் அகலும். அதைப் பங்கீடு செய்ய இயலாது. ஆகவே மருந்துகள் ஸ்டாக் தீர்ந்துவிட்டால் , மற்ற நோயாளிகளை திருப்பி அனுப்ப வேண்டியதுதான். 

பாபாவின் இந்த விளக்கத்தைக் இதைக் கேட்ட டாக்டர் உபாத்யா என்ற பக்தர்  "சுவாமி உடல் நலமின்றி,நீண்ட தூரம் பிரயாணம் செய்து நம்மை  நம்பி வந்திருக்கும் நோயாளிகளை வெறுங்கையோடு திருப்பி அனுப்புவது எப்படி எனக் கேட்க சுவாமி கூறுகிறார்:- "அவர்களுக்கு எனது விபூதியை பிரசாதமாகக் கொடுத்து அனுப்பு."

பக்தருக்கோ சந்தேகம் முழுதுமாகத் தீரவில்லை "சுவாமி விபூதியின் மகிமை தெரியாமல் இருப்பவருக்கு, இந்த விபூதி பிரசாதம், திருப்தியும், பயனும் அளிக்குமா?." இதைக்கேட்ட பாபா புன் முறுவலுடன் அவருக்குப் பதில்

அளித்தார் "கண் மருத்துவர் ஒருவரிடம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர் சென்றால் அவரைத் தம் பரிந்துரையுடன் அந்த சிறு நீரகத்துறை வல்லுனரிடம் அனுப்புகிறார் அல்லவா அதுபோல, நோயாளிகளுக்கு எனது விபூதிப் பிரசாதம் அளித்தால் அதுவே எனக்குப் எழுதப்படும் பரிந்துரைக் கடிதமாக செயல்படும். ஆகவே அதன்பின் அவர்களைக் கவனித்து குணப்படுத்துவது எனது பொறுப்பாகும்!


🌹சாயி வாக்கு சத்திய வாக்கு:

பகவானின்  இந்த உறுதிமொழி,  சத்ய வாக்கு என்பதை நிரூபிக்க, இது சம்பந்தமான ஒரு நிகழ்வை பாலசுப்ரமணியம் என்கிற சேவாதள் விவரிக்கிறார். 

 சுவாமி பல்நோக்கு மருத்துவமனை, பெங்களூர். வருடம்  2017ல் நான் அங்கு சேவாதளாக சேவை ஆற்றினேன். அப்போது மருத்துவமனை அலுவலர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் 10 நாட்களாகத் தணியாத அதிக ஜுரத்துடன் சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்தார் .ஆயினும் உடல்நிலையில் முன்னேற்றமில்லை. மருத்துவர்கள் குழம்பிய நிலை. அப்போது மருத்துவர்களிடம் , சுவாமி தமது விபூதி மகிமையை விளக்கிய  செய்தியைக் கூறினேன். எதிர்பாராதவிதமாக  யாரோ ஒருவர் இது சம்பந்தமான Whatsapp செய்தியையும் அப்போது எனக்கு அனுப்பி இருந்தார். அதையும் மருத்துவர்களிடம் காட்டினேன். அவர்களும், அதை தமக்குக் கிடைத்த பகவானின் வழிகாட்டுதலாக நினைத்து, அந்த நோயாளிக்கு சுவாமி விபூதியை நெற்றியில் பூசும்படி,  என்னைக் கேட்டுக் கொண்டனர். அணிவிக்கப்பட்ட பாபா விபூதி மருத்துவம் வேகமாக வேலை செய்தது. நோயாளி முன்றே நாட்களில் பூரண குணமடைந்தார்!


ஆதாரம்: Dr. Upadhyaya and Balu Sairam, Personal Narration  

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻பகவானின்  பரு உடல் மறைந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்  நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி. பாபா எங்கும் செல்லவில்லை. அவர் எப்போதும் போல், எக்கணமும் நம்முடன் இருந்து ,நம்மை வழிநடத்தி, பாதுகாத்துக் காப்பாற்றுகிறார் என்பதுதான். ஓம் ஸ்ரீ சாயிராம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக