தலைப்பு

செவ்வாய், 26 நவம்பர், 2019

பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் திரு. குணால் காஞ்சாவாலா அவர்களின் சாயி அனுபவங்கள்!


குணால் காஞ்சாவாலா ஒரு பிரபல இந்திய பின்னணி பாடகர், இவரது பாடல்கள் பெரும்பாலும் இந்தி மற்றும் கன்னட படங்களில் இடம்பெறுகின்றன.  மராத்தி, பெங்காலி மற்றும் இந்தியாவின் பிற அதிகாரப்பூர்வ மொழிகளிலும் பாடியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்பவர் சாமியாரோ, துறவியோ அல்ல அவர் தான் கடவுள், இறைவன். எங்கள் குடும்பத்தினரின் கஷ்டமான காலங்களில் எல்லாம் அவரின் உன்னதமான சக்தி தான் எங்களை காப்பாற்றியது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாபவையும், அவருடைய அதி அற்புதமான சக்தியிலும் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

2006 ஆம் ஆண்டு என்னுடைய மனைவி ஒரு விபத்தின் காரணமாகப் படுத்த படுக்கையானார். மருத்துவர்கள்  நம்பிக்கை இழந்துவிட்டனர். அப்பொழது பாபா எனக்கு பாதரசத்தால் ஆன சிவலிங்கத்தை அனுப்பினார், விஞ்ஞானமானது நாம் பாதரசத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறும்;  ஆனால் நான் என் வீட்டில் பாதரசத்தால் ஆன சிவலிங்கத்தை வைத்திருந்தேன். என் மனைவி அந்த சிவலிங்கதிற்கு அபிஷேகம் செய்து அந்த நீரை அருந்தினார்,  24 மணி நேரத்திற்குள்ளாக அவர் குணமாகி விட்டார். ஒரு முறை அவர் மனம் உவந்து மிக வலிமையாக இழுக்கும் போது அச் சிவலிங்கம் அதுவாக உடைந்து விட்டது.


சில வருடங்கள் கழித்து நானும் என் மனைவியும் மிகப் பெரிய கூட்டத்தில் பாபாவைச் சந்தித்தோம், 


அவர் எங்கள் அருகில் வந்து எங்களுக்கு திருமாங்கல்யம், ஒரு மோதிரமும் சுமார் 40,000 க்கும் அதிகமானோர் இருந்த அக் கூட்டத்தில் ஆசிர்வதித்து உருவாக்கி தந்தார். நான் அந்த திருமாங்கல்யத்தை என் மனைவியின் கழுத்தில் கட்டினேன், என் மனைவி அம் மோதிரத்தை என் கைகளில் அணிவித்து விட்டார், பின்னர் அவருடைய தனி அறையில் அவருடன் சிறிது நேரம் இருக்கும் பாக்கியசாலிகள் ஆனோம், தற்போது அவர் உடல் அளவில் இல்லையென்றாலும் உயிரால் எப்பொழுதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

ஆதாரம்: 25-04-2011 அன்று வெளிவந்த ஆங்கில நாளிதழான 'TEHELKA' பத்திரிக்கை

தமிழாக்கம்:  திருமதி  உமாராணி சங்கரலிங்கம் போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக