சூரியன் உதயமாகும் போதே, பக்ஷிகள் கூவிக்கொண்டிருக்கும் போதே நித்திரையிலிருந்து எழுந்து மனமார தியானிக்க வேண்டும். "ப்ரபோ! இரவும் பகலும் இது தான் என் சாவும் பிழைப்பும் இதுவே என் மனித பிறப்பு, என்ன செய்தாலும் என்ன செய்வித்தாலும் எல்லாம் உன்னுடையதே. எல்லா பாரமும் உன்னுடையதே. எல்லோரிடமும் அன்பு செலுத்திக் கொள்ளும்படி இருக்க ஆசீர்வதியுங்கள்!"
என்று பிரார்த்திக்க வேண்டும்.
படுத்துக் கொள்ளும் முன்பு முழங்காலிட்டு வணங்கி "தந்தையே! பக்தவத்சலா! இந்த நித்திரை ஒரு சின்ன சாவு. நாளை எழுந்திருப்பேனோ இல்லையோ . எழுந்தது முதல் எவ்வளவு தப்புகள் செய்தேனோ அதற்கு தக்க தண்டனை அளித்து கடனற்றவனாகச் செய்யுங்கள்" என்று வேண்டிக் கொள்ளும்படி வேண்டும்.
- பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா
ஆதாரம் : அன்யதா சரணம் நாஸ்தி (அத்தியாயம் - 30)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக