பிறப்பு இறப்பற்ற இறைவன் பூமியில் இறங்கி வரும் அவதாரத் திருநாளை அகில உலகமே கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறது... அதை ஆதி சாயி பக்தர்கள் கொடுத்து வைத்திருந்தபடி கோலாகலமாகக் கொண்டாடினர், அதன் கொண்டாட்ட விவரங்கள் வியப்பு மிகு பதிவாக இதோ...
1946, நவம்பர் 23, சனிக்கிழமை:
1946 நவம்பர் 23ம் தேதி பாபாவின் பிறந்த நாள் முதல் முறையாக பெரிய விழாவாக மந்திரில் கொண்டாடப்பட்டது. காலையில் பக்தர்கள் சங்கீத மங்கள வாத்யங்களுடன் பாபாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செலுத்தி, மாலை அணிவித்து, பாத பூஜை செய்தனர். அவர்களை அவர்கள் மகன் பிறந்த நாள் வைபவத்திற்கு அழைத்தனர்.
பாபாவின் பெற்றோர்களை மந்திருக்குள் விழாக் கால வரவேற்பு அளித்து மந்திருக்குள் கூட்டி சென்றனர்.
மந்திரின் முன் புறம் அமைந்துள்ள மேடையில் ரங்கோலி போட்டு அலங் கரிக்கப் பட்டிருந்தது. அழகான வேலைப்பாடு கொண்ட நாற்காலியில் ஸ்வாமி அமர்ந்து இருந்தார். பெற்றோர்கள் சந்தன கலவையும் குங்குமத்மதயும் ஸ்வாமியின் நெற்றியில் இட்டனர். சந்தன எண்ணையில் ஒரு பூவை நனைத்து பாபாவின் சிரசில் எண்ணை தேய்த்தனர். பின் மாலை போட்டார்கள். பாபா பெற்றோருக்கு லட்டு கொடுத்து ஆசி வழங்கினார்.
அதன் பின், மற்ற பக்தர்களுக்கு பாபாவிற்கு எண்ணைய் தேய்க்க ஆசி வழங்கப்பட்டது. அவர்கள் சந்தன எண்ணையில் ஒரு பூவை நனைத்து பாபாவிற்கு சிரசில் எண்ணை வைத்தனர். பின் அவரது பாதங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அளித்து பாபா ஆசி வழங்கினார். பாபா குளித்து விட்டு வந்தவுடன், அவருடைய நாற்காலியில் அமர்ந்தார். பக்தி ரஸத்துடன் பஜன்கள் பாடப்பட்டன. ஆரத்திக்கு பின் அனைவருக்கும் மீண்டும் பிரசாதம் வழங்கப்பட்டது. பாபா அவருடைய அனைத்து பக்தர்களுக்கும் மிகப் பிரம்மாண்ட விருந்தும் ஏற்பாடு
செய்திருந்தார். இரவு 10 மணிக்கு விழா முடிவடைந்தது.
மூலம் : Source: Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 to 1985)
தமிழாக்கம்: Prof. N.P.ஹரிஹரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக