உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்சிகளில் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டேன் (23- நவம்பர் 1980. பிரசாந்தி நிலையம்). ஒருவருக்கு பிறப்பில்லை என்றால் இறப்பும் இல்லை. இறப்பதற்கு ஒருவர் பிறந்து இருக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் காரணமும் காரியமும் ஆகும். "நான் இவ்விரண்டையும் கடந்தவன்."
-Sai Baba, SSS, Vol. XI. p. 62
இறைவனுடன் ஒன்றாக உணர்வதிலேயே உண்மையான இன்பம் உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள். மகிழ்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எனக்கு கூற வேண்டாம். நான் எப்போதும் மகிழ்சியாகவே இருக்கிறேன். நான் ஒரு மகிழ்ச்சி குளம், வேண்டும் அளவு அதில் இருந்து எடுத்து கொள்ளுங்கள். அந்த மகிழ்ச்சி நீரை அருந்தி உங்கள் வாழ்வை புனித மாக்கி கொள்ளுங்கள். இறைவனுக்கான தாகமே உங்களை இங்கு இழுத்து வந்துள்ளது. ஆழ்ந்து அருந்தி இறை அருளை அனுபவியுங்கள்.
-Sai Baba, SSS, 1/96. p.28
"அன்பின் திருஉருவங்களே இறைவனுக்கு பிறந்த நாள் என்று சிறப்பாக எந்த நாளும் கிடையாது." உங்கள் எண்ணம், நடத்தை அனுகுமுறை யாவும் பரிசுத்தமாக இருக்க இதயத்தில் தீர்மானிக்கும் நாளே உங்களுக்கு இறைவன் பிறந்த தினம். தன்னலம் அற்ற சேவை செய்ய தீர்மானிக்கும் நாளே இறைவனின் பிறந்த தினம். அன்றிலிருந்து நீங்கள் பிறந்த நாளை கொண்டாடலாம்.
-Sai Baba. SSS. Vol. XI. p. 221
அவதாரம் மனித உருவம் தாங்கி பிறந்த நாளை புனிதமாக கருதுவதில் என்ன உபயோகம் அவதாரத்திற்கு இருக்கிறது. அவருடைய உபதேசங்கள் உங்கள் உள்ளத்தில் புகுந்து வளர்ந்து உயிர் உள்ள செயல்களாக மாறும் நாளையே அவர் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும். உங்கள் கிராமத்திலேயே அந்ந நாளை கொண்டாடுங்கள்.வெகு தூரம் பயணித்து நான் உடலுடன்(பௌதீகமாக) இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்பெனும் விதையை உங்கள் இதயத்தில்(மனதில்) விதையுங்கள். அவை சேவை என்ற மரங்களாக வளர்ந்து ஆணந்தம் என்ற சுவையான பழங்களை பொழியும். ஆணந்தத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுதான் சாயிபாபாவின் பிறந்த நாளை கொண்டாடும் சரியான முறை.
-Sai Baba. SSS, Vol. VIII . p. 124
உடலுடன் பிறந்த அனைவரும் அவதாரங்களே. அப்படியானால் ராமர்,கிருஷ்ணர, ஏசு புத்தர்களுக்கு மட்டும் என்ன மகத்துவம். அவர்கள் பிறந்த நாளை புனிதமாக கருதி ஆர்வமுடன் ஏன் கொண்டாடுகிறீர்கள்? காரணம் அவர்கள் தாங்கள் ஆத்மா(இறைவன்) என்று அறிவார்கள்; நீங்கள் அதை அறியாதவர்கள் மேலும் அதுவே உண்மை. தன்னை உணர்வது மகிமை ,மாட்சிமை, வலிமை, கருணையை சிறப்பாக அளிக்கும். தன்னை அறிவது முக்தியை(விடுதலை) அளிக்கும்.
-Sai Baba, SSS, Vol. VIII, pp. 123 & 124
தமிழாக்கம்: சொ. சுந்தரராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக