தலைப்பு

திங்கள், 11 நவம்பர், 2019

இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?


பக்தர் கேட்டவை பாபா அருளியவை:

ஹிஸ்லாப்: இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

பாபா:  சூடாயிருக்கும்விளக்கை ஒரு குழந்தை தொடுவது, அவ்விளக்கு குழந்தையை சுடும் வரை தான். இளைஞர்கள் நிதானமற்று இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உடனுக்குடன் பலன் காண விழைகிறார்கள்.

ஒரு உதாரணம்: நேற்று இங்கு ஒரு திருமணம் நடந்தது. அந்த மணமகன் தனக்கு ஒரு குழந்தை உடனே வேண்டும் என்று விரும்பினான். ஒன்பது மாதங்கள் காத்திருக்க அவனுக்கு விருப்பம் இல்லை. ஒரு குரு( என்று சொல்லப்படுபவர்) கண் முன் வந்தால் இளைஞர்கள் வெகு துரிதமாக தங்களுக்கு மெய்யறிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரை சூழ்ந்து கொள்கிறார்கள். ஆனால் ஒருமுறை ஏமாந்து விட்டால் அவர்கள் விலகி சென்று விடுகிறார்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு முன் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் இருக்க வழி செய்கிறது.

ஒரு சிறுகதை: மிக ஏழ்மையில் இருந்த பெற்றோரின் மகன் பி.ஏ. என்ற பட்டம் பெற்றான். அவன் பலதடவைகள் பரிட்சை எழுதி தோற்றதால் அலுப்புற்ற அவன் ஆசிரியர்கள் முடிவில் அவனை ஒரு பட்டதாரி ஆக்கினார்கள். இப்பொழுது அந்த யுவனின் பெற்றோர்கள் மிகவும் பெருமை அடைந்து "உனக்கு ஒரு மனைவியை தேடுவோம்" என்றார்கள். "நான் ஒரு பி.ஏ. எனக்கு வரும் மனைவியும் பி.ஏ. வாக இருக்க வேண்டும்" என்று மகன் சொன்னான். அவன் தாய் சொன்னாள். "அவளுடைய அறையில் இருந்து காலை 9 மணிக்கே வெளியில் வரக் கூடிய ஒரு பெண்ணிற்கு நம்மால் வேலைக்காரர்களை அமர்த்த முடியாது. வீட்டு வேலைகளில் உதவி செய்யும் ஒரு மனைவியே நமக்கு தேவை". அவன் மகன் சொன்னான் என்னுடைய தேவைகளே முக்கியம்.

உங்கள் தேவைகள் அல்ல. என் விருப்பப்படி செய்யுங்கள். இல்லாவிடில் நான் வீட்டிலிருந்து வெளியேறி விடுவேன்". அந்த பெற்றோர்கள் சமாதானமாகி அவன் விரும்பிய படியே ஒரு மனைவியை தேடி கொணர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் நண்பர்களிடம் சொன்னான், "நான் மகிழ்ச்சி நிறைந்து இருக்கிறேன்." மூன்று நாட்களுக்கு பிறகு அவன் தன் மனைவியிடம் சொன்னான்... "அன்பே! எழுந்திருந்து எனக்கு காபி தயார் செய்து கொண்டுவா". அவள் சொன்னது- "அன்பே! உன்னைப் போலவே நானும் ஒரு பி.ஏ., எழுந்திருந்து காபி தயார் செய்து எனக்கு கொண்டு வா". வாழ்க்கை கசந்து விட்டதாகவும் எல்லாமே துக்கமும் சோகமும் நிறைந்ததாகவும் அவன் இப்பொழுது எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தான். இம்மாதிரி அவன் வாழ்க்கை மூன்றே நாட்களில் முழுமையான ஆனந்தத்தில் இருந்து முழுமையான துக்கத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இளைஞர்களின் நடத்தை ஆதர்சமாக இல்லாமல் இம்மாதிரி இருப்பதற்கு காரணம் பெற்றோருக்கு மரியாதை செலுத்தியும் வணங்கச் சொல்லியும் அவர்களை பயிலுவிக்காததே. ஆன்மீக வழியிலும் அவர்கள் நடத்தை இம்மாதிரியே இருக்கிறது. உள்ளம் தூய்மையாக இல்லாவிடில் ஆன்மீக ஒளி எப்படி பிரகாசிக்கும்? உள்ளத் தூய்மை அடைய செய்ய வேண்டிய பணி அமைதியான ஆத்ம விசார ணையும் பகுத்தறிதலுமேயாகும். உள்ளம் தூய்மை அடைந்த பிறகு வெளியில் தெரியும் கட்டுப்பாடுகளுக்கு சிறிதளவாவது பலன் இருக்கும்.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல் என்ற புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக