தலைப்பு

திங்கள், 11 நவம்பர், 2019

ஆந்திர முன்னாள் அமைச்சர் டாக்டர் J. கீதா ரெட்டி அவர்களின் அனுபவங்கள்

டாக்டர் J. கீதா ரெட்டி. 
ஆந்திர முன்னாள் அமைச்சர் (2004 - 2014)

நான் எப்பொழுதுமே “பாபாவின் பக்தையாவேன்“ என நினைத்துப் பார்த்தது இல்லை, ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. 1980இல், என் கணவர் திரு. டாக்டர் இராமச்சந்திரரெட்டி தன் 30-வது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அது அவரின் இடது பக்க உடம்பையும், வாயையும் முடக்கியது,
நாங்கள் லண்டனில் உள்ள உலகத்திலேயே மிகச் சிறப்பான மருத்துவமனைக்குச் சென்றோம், ஆனால் அங்கு மருத்துவர்கள் முழுவதும் குணப்படுத்த முடியாது எனக் கூறிவிட்டார்கள். ஆங்கிலேய மருந்துவர்களும், என்னுடைய பேராசிரியர்களும் இறுதியில் நம் நாட்டில் உள்ள கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூற என் மன உறுதியை நான் இழந்து விட்டேன். இதற்கு முன்னால் நான் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

இறுதியாக நாங்கள் பெங்களூரில் உள்ள வொய்ட்பீல்டில் பாபாவின் முதல் தரிசனத்தைப் பெற்றோம், யாருமே பாபாவிடம் எங்களுக்கு உண்டான பிரச்சனையைக் கூறவில்லை. பாபா நேராக என் கணவர் உட்கார்ந்திருந்த இடத்திற்குச்சென்று, என் கணவரின் இடது புற தோள்களையும் தலையையும் தடவினார். என் கணவரிடம் பாபா வருத்தப்பட வேண்டாம் எனக் கூறினார்.   ஆண்களின் தரிசனம் முடிந்த பிறகு சுவாமி பெண்கள் பக்கமாக வந்தார். அவர் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நேராக பாபா என்னிடம் வந்து, மனம் வருந்தாதே; “உன் கணவரை நான் பார்த்துக் கொள்வேன்” என்றார். நான் அவரைப் பார்க்கும் போது அவரது கண்கள் மூலம் என் மேல் காட்டும் அன்பும், பரிவும் தான் எனக்குத் தோன்றியது. அந்தச் சந்திப்பிற்குப் பின்பு என் கணவரின் உடல்நிலை வெகு வேகமாக சீராகத் தொடங்கியது.

அதன் பின் எங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.   நானும் என் கணவரும் 12 வருடங்கள்  வெளி நாட்டிற்குச் சென்று விட்டோம். 1992 இல் பாபா, ஹைதராபாத்திற்கு வந்திருந்தார். என் தாயார் சில காலத்திற்கு முன்பு காலமானார்,  அப்பொழுது நான் மிகவும் மனம் தளர்ந்திருந்தேன், ஆனால் பாபா  ஒரு முறை கூறியது என் ஞாபகத்திற்கு வந்தது, சுவாமி என் வாழ்க்கையில் என் தாயாரின் ஸ்தானத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறியது என் மனத்தை அமைதிப்படுத்தியது. 

நம் சுவாமியை நேரே பார்ப்பது மிகவும் அற்புதமான, பளிச்சிடும் அனுபவம், அவரின் புன்னகையானது மந்தகாசமான மயக்கும் புன்னகையாகும். நம்மை அவர் சும்மா வேனும் பார்த்தாலே போதும் நாம் சந்தோஷமும், மன அமைதியும் அடைவோம். சுவாமியிடம் உள்ள மிக உயர்ந்த உன்னதமானது எதுவெனில் மிகப்பெரிய சொற்பொழிவுகளிலும், மதச் சடங்குளிலும், பூஜை புனஸ்காரங்களிலும், மந்திரங்களிலும் நம்பிக்கை இல்லாதவர், உண்மையாக அவர் என்னிடம் ஒருமுறை,   “ உங்களின் நோய்கள் என்பது என்னுடைய அழைப்பு அட்டையாகும் என்று கூறினார்.

ஆதாரம்: 25-04-2011 அன்று வெளிவந்த ஆங்கில நாளிதழான 'TEHELKA' பத்திரிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக