தலைப்பு

செவ்வாய், 5 நவம்பர், 2019

சாயியின் மூன்று சங்கல்பங்கள்!


நான் ஒருவருக்கு வாக்குத் தந்துவிட்டால், அவர் எனக்கெதிராகத் திரும்பினாலும் நான் அவரை வெறுக்க மாட்டேன். அவர் என்னை இகழ்ந்து பேசினாலும், அவரை நான் தொடர்ந்து நேசிப்பேன். என் வாக்குறுதியைக் கடைப்பிடித்து இறுதிவரை போராடுவேன். என்றோ ஒருநாள் அவர்கள் சரியான பாதைக்குத் திரும்பி வருவார்கள்.

சில சூழ்நிலைகளின் காரணமாகச் சில மாற்றங்கள் வரலாம். அவை நிரந்தரமானவை அல்ல. அவற்றின் காரணமாக நான் என் வழியை மாற்றிக் கொள்வதில்லை. இது எனது இரண்டாவது சங்கல்பம்.

எனது மூன்றாவது சங்கல்பம் இதுவே: எல்லோருக்கும் நல்லது, சமுதாயத்துக்கு நன்மை என்று நினைத்து ஒரு செயலில் ஈடுபட்டால், எந்தக் காரணம் கொண்டும் அதை நான் விடமாட்டேன். இந்த உலகமே எதிர்த்து வந்தாலும், நான் பின்வாங்காமல் மேற்கொண்டு செல்வேன்.

இவைதாம் எனது மூன்று சங்கல்பங்கள்: முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டேன். கொடுத்த வாக்கைத் தவறவிட மாட்டேன். கொடுப்பேனே அன்றி வாங்கமாட்டேன்.

-சுவாமி, அருளுரை, குருபூர்ணிமை 13-07-1984

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக