தலைப்பு

சனி, 2 நவம்பர், 2019

பாபா ஒரு நடமாடும் தெய்வம் - முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பத்மஸ்ரீ திரு M. N. கிருஷ்ணமணி

காலம்சென்ற பிரபல மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவருமான பத்மஸ்ரீ திரு. M. N. கிருஷ்ணமணி அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்.

எம்.என்.கிருஷ்ணமணி: சாயிபாபா பிறரை காப்பாற்றுவதற்காக தனது அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார். எனது சகோதரி மோசமான கேஸ்ட்ரிக் அல்சரால் ( இரைப்பை புண் ) பாதிக்கப்பட்டிருந்தார். அவள் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவமனை மருத்துவர் அவளுக்கு உணவாக பாலை மூக்கு வழியாக அளிக்கப் பரிந்துரைத்தார். ஒரு இளவயதினரான,
அனுபவமில்லாத செவிலியர் அந்தப் பரிந்துரையை தவறாகப் புரிந்துகொண்டு எனது சகோதரிக்கு பாலை நரம்பின் வழியாக செலுத்தியதால் அது நேரடியாக ரத்தத்துடன் கலந்துவிட்டது. அதனால் எனது
சகோதரி சுயநினைவை இழந்து, இறந்து விடுவார் எனத் தோன்றியது. அந்த தவறினை சரிசெய்தபோது, எனது சகோதரி உடனே எழுந்து உட்கார்ந்து, "பாபா இங்கு இருந்தார், அவர் எனக்கு விபூதி கொடுத்தார், நான் இப்போது முழுமையாக சரியாகிவிட்டேன்" என்று கூறினார். ஒரு அறுவைச் சிகிச்சையும் இல்லாமல் எனது சகோதரி மருத்துவமனையிலிருந்து நடந்து வெளியேறினார்.

1999ம் ஆண்டில் எனது மனைவி மாரடைப்பினால் ( ஹார்ட் அட்டாக் ) பாதிக்கப்பட்டார். பைபாஸ் அறுவைச் சிகிச்சை பெற்று நான்கு மாதங்கள் கழித்து ஒருநாள் மாலை நேர நடைப்பயிற்சியின்போது மயக்கமடைந்துவிட்டார். நான் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றேன். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையினர் அவள் இன்னும் நான்கு மாதங்களாவது வாழவேண்டும் என்றால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினர். என் மனைவி இதை அறிந்து தனது அறுவை சிகிச்சைக்கு முன்பு பாபாவின் தரிசனம் பெறவேண்டும் என வலியுறுத்தினார். மருத்துவரும் ஒரு பக்தர்தான் என்பதால் அவர் என்மனைவியை மருத்துவமனையிலிருந்து விடுவித்தனுப்பினார். ஒரு சக்கர நாற்காலியே கதி என்று அதில் அமர்ந்து ஆக்ஸிஜன் சிலிண்டரையும் இழுத்துக்கொண்டு என்மனைவியும் உடன் நானும் பாபாவை சந்திக்கச் சென்றோம். அன்று கிறிஸ்துமஸ் நன்னாள். புட்டபர்த்தியில் பாபாவின் தரிசனம் பெறுவதற்காக காத்திருப்பவர்களின் முன்வரிசையில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். பாபா என்னைப் பார்த்து, "அவளுக்கு இரண்டாவது அறுவைச்சிகிச்சை கிடையாது" என்று கூறினார். அவர் காற்றில் விபூதி வரவழைத்துக் கொடுத்து, கவலை கொள்ள வேண்டாம் என்று கூறினார். சக்கர நாற்காலியே கதி என்றிருந்த எனது மனைவி பாபாவின் தரிசனத்திற்குப் பின்னர் நடமாடத் தொடங்கிவிட்டார், மேலும் அவருக்கு இரண்டாவது அறுவைச்சிகிச்சை தேவைப்படவில்லை.


எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நான் மீண்டும் எனது மனைவிக்காக வேண்டி இரண்டாவது முறையாக பாபாவை காணச்சென்றேன். எனது மனைவிக்கு இடுப்பில் புற்றுநோய் அதிகரித்துக் காணப்பட்டது. எனது மனைவி நடக்க முடியாமலும் படுக்க முடியாமலும் அவதிப்பட்டு அவருக்கு மார்ஃபைன் ஊசிமருந்துகள் ( வலியை மறக்கவும் தூக்கத்திற்காகவும் ) செலுத்தப்பட்டு வாழ்ந்து வந்தார். நான் பாபாவை பார்த்தபோது பாபா, "கேன்சர் கேன்சல்டு" என்று கூறிவிட்டு தனது கையசைவினால், ஸ்படிகத்தாலான (கிரிஸ்டல்) ஒரு சிவலிங்கத்தை சிருஷ்டித்துக் கொடுத்தார். "அபிஷேகம் செய்து அந்த நீரை அவளுக்கு குடிக்கக்கொடு" என்று கூறினார். அடுத்த ஒன்பதாவது நாளில் எனது மனைவி சந்தைக்குச் சென்றுவந்தார். அவரது புற்றுநோய் போய்விட்டிருந்தது.

சாயிபாபாவின் வாழ்வில் அவர் செய்துகாட்டியுள்ள அற்புதங்கள் எண்ணில் அடங்காது. நான் வேதாந்த தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டவனாக இருந்துவந்தேன். தற்போது நான் பிரார்த்தனை செய்யும் நேரங்களில் ஜீசஸ், அல்லாஹ் மற்றும் புத்தர் ஆகியோரது பெயர்களையும் ஜெபிக்கிறேன். உலகின் அனைத்து மதங்களையும் உங்களால் புட்டபர்த்தியில் காண இயலும். ஒருமுறை ஈரானிய சிறுவன் ஒருவன் காயத்ரி மந்திரத்தை சரியான உச்சரிப்பில் ஜெபிப்பதை நான் கண்டேன். பாபா அனைத்து மதங்களிலும் உள்ள ஒத்திசைவினை நமக்கு உணர்த்தி நம்மை ஒற்றுமைப்படுத்தினார். பாபா பலவகயிலான கட்டணமில்லாத மருத்துவமனைகளை நடத்தியதையும் மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் நடத்தப்பட்ட அவரது கல்லூரிகளையும் பற்றி சொல்வதற்கு அளவிடற்கரியது. எங்களுக்கு அவர் ஒரு நடமாடும் தெய்வம்..

ஆதாரம்: 25-04-2011 அன்று வெளிவந்த ஆங்கில நாளிதழான 'TEHELKA' பத்திரிக்கை 

மொழிபெயர்ப்பு: M.சொக்குசாமி பாலசுப்பிரமணியம்


சாயி அன்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ.  திரு. M.N கிருஷ்ணமணி அவர்கள் இறப்பதற்கு மூன்று நாள் முன்னர் பதிவு செய்த வீடியோ இது.

15 பிப்ரவரி 2017 அன்று பெங்களூருவில் திரு M.N கிருஷ்ணமணி அவர்கள் காலமானார். அவர் இறப்பதற்கு மூன்று நாள் முன்னரே தன்னுடைய இறப்பை முன்கூட்டியே கணித்த அவர். தன்னுடைய கடைசி விருப்பத்தை ஒரு வீடியோவாக ரெக்கார்ட் செய்திருந்தார். அந்த வீடியோவில் அவர் சொல்லியிருப்பதை ஆங்கிலம் தெரியாத அன்பர்களுக்காக சுருக்கமாக கீழே பதிவு செய்துள்ளோம்.

என் இறப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த சமூகத்திற்காக என்னால் முடிந்த நல்ல காரியங்களை செய்து முடித்து விட்டேன்.  பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின்  பக்தன் என்பதால் உலகளாவிய அணுகுமுறைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை நான் நன்கு கற்றுள்ளேன். நான் இறக்கும் போது நிம்மதியாக இறப்பேன். ஏனென்றால் நான் என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு தவறான காரியமும் செய்யவில்லை. அதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.  நான் இறந்த பிறகு எனக்கு நீங்கள் எந்த ஒரு சடங்கும், சம்பிரதாயமும் செய்ய வேண்டாம். என்னுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ளும்.. என் குடும்ப உறுப்பினர்களும், சாய் பக்தர்களும், என்னுடைய நண்பர்களும், நீதிபதிகளும்,  மற்றும்  ஜூனியர்ஸ்களும் எழுந்துநின்று சுவாமியின் நாமத்தைச் சொல்லுங்கள்.  என்னுடைய உடல் மின் தகனத்திற்கு சென்று தீ எரியும் முன் சுவாமியின் சாயி காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்.  என்னுடைய உடல் முழுவதும் எரியும் வரை தொடர்ந்து அந்த மந்திரத்தை உச்சரியுங்கள்...



M.N கிருஷ்ணமணி அவர்கள் நீதித் துறையில் மிக உயரிய பதவிகளை வகித்து இருக்கிறார்கள். எந்த ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் வாங்காத அளவிற்கு, இவர் அத்துணை பட்டங்கள் வாங்கியுள்ளார். இவரின் சேவையை பாராட்டி மத்திய அரசும் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் வழங்கியுள்ளது. இத்துணை பட்டங்களையும், பதவிகளையும் பார்த்த அவர்.. பகவானை அறிந்த நாள் முதல் தன்னுடைய கடைசி காலம் வரை சிறிதும் ஈகோ இல்லாமல் பகவானுக்கு பிடித்த ஒரு நல்ல பக்தனாக வாழ்ந்து இறந்து இருக்கிறார். இவரின் நல்ல உள்ளத்திற்க்காக மட்டும் தான் பகவான் இவரின் குடும்பத்தார்களை பல முறை காப்பாற்றியிருக்கிறார். சாயி பக்தர்களான நமக்கெல்லாம் ஒரு பக்தன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். ஜெய் சாய்ராம்.

இவரின் மெய்சிலிர்க்கும் அனுபவங்களை ஆடியோ வடிவில் கேட்க... 
👇👇

மொத்தம் மூன்று பாகங்கள்

Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: செப்டம்பர் 2016

1 கருத்து:

  1. சாய்ராம்🙏 பகுதி 1 எங்கும் நிறைந்த பர பிரம்மம் சிலிர்க்கும் நிகழ்வுகள்.ஏன் சுதாமாவை கிருஷ்ணனின் குரு என, சத்ய சாயி கூறினார். பக்தர்களுக்கே தோன்றும் சந்தேகங்கள்...

    பதிலளிநீக்கு