தலைப்பு

புதன், 6 நவம்பர், 2019

பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் அனுபவங்கள்!


பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ ராம்நாத் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. இவர் இந்திய திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர் இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.

நான் 9 வயதாக இருக்கும்பொழுது  பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மும்பையில் பெரிய கூட்டத்தினரின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். நான் கூட்டத்தில் அவரின் கண் பார்வைக்கு மிக தூரத்தில் இருந்தேன். ஆனாலும் அவர் என்னைக் கண்டுகொண்டார். நூற்றுக்கணக்கானோர் இருந்த அந்தக் கூட்டத்தில் சிறிய பெண்ணான என்னை கண்டு கொண்டு, என்னைப் பாடச் சொன்னார். எனக்கு பாட மிகவும் பிடிக்கும் என்பதை எப்படி அவர் தெரிந்து கொண்டார் என்பதை அடிக்கடி நான் நினைத்துக்கொள்வேன்.


அதன் பிறகு அவருக்காக மும்பை, சென்னை, புட்டபர்த்தியில், பாடிக் கொண்டிருக்கிறேன். இவ்வுலகில் அவர் ஒரு மகா புருஷர் என எண்ணுகின்றேன். அவருடைய அற்புதங்களை நான் நேரில் கண்டதில்லை ஆனாலும்  அவருடைய இருப்பு நமக்கு அற்புதமானது. பத்து பேர் நிறைந்த ஒரு வீட்டில் ஒழுக்கத்தையும் நேர்த்தியையும் கடைபிடிப்பது மிகவும்  சிரமமான ஒன்று. ஆனால் அவர் பல கோடி  மக்களை தன்வயப்படுத்தி,  ஆத்மார்த்தமான அமைதியை நிலைநாட்டி விடுகிறார். அதனால் மக்கள் அவர் நம்முடன் இருக்கும் போது மட்டுமல்ல எப்போதும் அவரை உணர்கிறார்கள். ஆனால் எனக்கு அவர் முன்பு அளித்த ஆசீர்வாதம் போல் இப்பொழுதும் கிடைக்கவில்லையே என்பது மிகப்பெரிய இழப்புதான்.

ஆதாரம்: 25-04-2011 அன்று வெளிவந்த ஆங்கில நாளிதழான 'TEHELKA' பத்திரிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக