தலைப்பு

செவ்வாய், 22 அக்டோபர், 2019

காஞ்சிபுரம் S.M சில்க்ஸ் நிறுவனர் திரு. மனோகரன் அவர்களின் அனுபவங்கள்.


சுவாமியின் நீண்டநாள் பக்தரும் புகழ்பெற்ற S. M. சில்க்ஸ் நிறுவனருமான சாய் சகோதரர் திரு மனோகரன் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்! 

சாய்ராம்... திரு மனோகரன் அவர்களின் பாசமிகு நண்பர் ஒருவர்  வக்கீல் தொழில் செய்து வந்தார் அவர் ஒரு நாத்திகர்.  அவரது அலுவலகத்தில் அவரது தந்தையின் படமும் ஒரு அரசியல் கட்சித் தலைவரின் படம் மட்டுமே இருக்கும். வேறு எந்தக் கடவுளின் படங்களும் இருக்காது.  ஒருமுறை அவரை காண மனோகரன் அவரது அலுவலகம் சென்றபோது அவர்   நெற்றியில் விபூதி பூசிக் கொண்டிருந்தார் அவரது அலுவலகத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன இவர், நாத்திகரான நீங்கள் பகவான் ஸ்ரீ  சத்ய சாய்பாபாவின் படத்தை   மாட்டி  இருக்கிறீர்களே என கேட்டார் அதற்கு பின்னாளில் உயர்ந்த நீதிபதியாக பதவி வகித்த அந்த வக்கீல் நண்பர் கூறிய பதில்  உடனடியாக பகவானை சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு ஊட்டியது இவர் சுவாமியின் பக்தராக மாறும் அளவிற்கு அந்த நண்பர் என்ன பதில் கூறினார் என்பதை தெரிந்து கொள்ளவும் 

ஒருமுறை இவர் புட்டபர்த்தி சென்று சுவாமியை தரிசித்த பின்பு பேருந்தில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் ஏறிய பயணி ஒருவர் இவரது  பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு இவரிடம் பேச்சுக் கொடுத்தார். சுவாமி அந்த பயணியின் மூலம் இவரது தினசரி கடை வியாபாரம்  ஆயிரங்களில் இருந்ததை பல லட்சங்கள் ஆக மாற்றினார் ஜவுளிக்கடை ஜவுளி சாம்ராஜ்ஜியம் ஆனது. சுவாமி, வாழ்க்கையில் சில நூறுகளுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த இவரை கோடீஸ்வரன் ஆக்கிய அற்புத கதையை கேட்டு தெரிந்து கொள்ளவும், 

மேலும் சுவாமியை சந்தித்தபின் புறங்கூறுதல், பொய் பேசுதல், ஆர்பாட்டம், ஆரவாரம் போன்ற எதிர்மறை குணங்கள் மறைந்து நேர்மை,  பணிவாகப் பேசுதல்,  பிறரிடம்  அன்பு செலுத்துதல் போன்ற குணங்கள் பெருகி வாழ்க்கை வசந்தம் ஆனது என்று ஆனந்தமாக இவர் கூறுவதை எல்லாம் கேட்டு மகிழ

வாருங்கள் உள்ளே! மொத்தம்  இரண்டு பாகங்கள் 

Source :ரேடியோ சாய்
ஒளிபரப்பு செய்யப்பட்ட வருடம்: மே 2010

1 கருத்து: