புட்டபா்த்தியில் உள்ள பகவான் இளம் சிறாா் பள்ளியில் குழந்தைகள் படித்து வருகிறாா்கள். ஒரு முறை சைதன்ய ஜோதியில் மாலை நேரத்தில் நடந்த விழாவில் அந்த இளம் சிறாா்களையும் பகவான் பாபா அவா்கள் கலந்து கொள்ள அனுமதிருந்தாா்.
நிகழ்ச்சி ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தபோது தனியாக இளம் சிறாா்கள் நிகழ்ச்சியினை காண நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். விழா அரங்கில் தீடிரென மின்சாரம் நின்று போனதால் அரங்கத்தில் இருள் சூழ்ந்தது. மேடையில் அமாந்திருந்தாா் பகவான். இருள் சூழந்தவுடன் அந்த இருளில் ஒரு சிறு பையனின் கரத்தை பிடித்து லட்டு ஒன்றினை கொடுத்து யாருக்கும் தெரியாமல் ஒருவரிடமும் கூறாது கையில் வைத்து பின்னால் கைகளை கட்டிக் கொள்ள கூறினாா். அப்பையனும் அவ்வாறே மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான். ஒரு நிமிடம் கழித்து மீண்டும் மின்சாரம் வந்தது. லட்டினை பெற்ற பையன் அருகிலுள்ள பையனை பாா்க்கும் பொழுது அவனும் கைகளை பின்னால் கட்டி மறைத்திருந்தான். இது போல அங்குள்ள மற்ற சிறுவா்களும் அவ்வாறே இருந்தனா். ஒருவருக்கொருவா் இதனை பாா்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டு தங்கள் கைகளை திறந்து காட்டினா். அத்தனை இளம் மாணவா்களின் கையிலும் பகவானால் படைக்கபட்ட லட்டு காணப்பட்டது. அத்தனை இளம் மாணவா்கள் முகத்தினிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. பகவானோ மேடையில் ஏதும் நடக்காது போன்று அமா்ந்திருந்தாா். அந்த இருளில் எப்போது பகவான் மேடையினை விட்டு இறங்கினாா். அத்தனை போ் அருகிலும் எப்போது சென்று இத்தனை லட்டுகளையும் அளித்தாா். அத்தனை லட்டுகளும் பகவானின் கரத்தில் கீழேவிழாது எப்படி இருந்தது. ஒருகையில் லட்டுகளை வைத்து ஒருகையினால் யாராலும் அத்தனை பேருக்கும் அளிக்கமுடியாத நிகழ்வினை பகவான் நிகழ்த்தியிருக்கிறாா் என்பது அங்குள்ள மற்றவா்களுக்கு ஆச்சரியமான நிகழ்வாக இருந்தது. மேலும் கணத்தில் ஒரே நேரத்தில் அத்தனை இளம் மாணவா்கள் கரங்களில் லட்டுக்களை அளித்தாா் என்றால் அத்தனை இளம் மாணவா் பக்கத்திலும் பகவான் அருகில் இருந்து அளித்தது ஒரே நேரத்தில் அவ்வளவு எண்ணிகையுள்ள பகவானாக தோன்றி பிற மாணவா்கள் அறியாதவாறு இந்த அற்புதத்தினை சாயிமாதா நிகழ்த்தியுள்ளது அந்த இளம் மாணவா்களின் மேல் ஶ்ரீ சத்திய சாயி சரஸ்வதி கொண்டுள்ள அன்பினையே காட்டுகிறது.
லட்டினை பெறாத மற்றவா்களும்(அந்த நிகழ்வில் கலந்து கொண்டவா்கள் இன்புற்றனா் எனில்) லட்டினை பெறாத நாமும் ஶ்ரீ சாயிமாதாவின் அன்பினை எண்ணி மகிழ்ச்சி கொள்ளலாம் அல்லவா.
ஆதாரம்: தபோவனம்
சங்கல்பத்தின் மாத்திரமே எதையும் சாதிக்கும் இறைவன் சத்ய சாயி. அவருக்கு இது வெறும் சாதாரண நிகழ்வே..
லட்சக்கணக்கான ஜீவ ராசிகளைப் படைத்து இயற்கையின் கைகளில் ஒப்படைத்த இறைவன் சத்யசாயிக்கு அனைவர் கைகளிலும் லட்டு வைப்பதொன்றும் அவருக்கோர் அரிய செயலே அல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக