தலைப்பு

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

அக் 20 - அவதார பிரகடன தினம்


1940-ம் ஆண்டு அக்டோபர் இருபதாம் தேதி.. சத்யா தனது அண்ணன் வீட்டில் புத்தகப் பையை வீசி எறிந்துவிட்டு, "என் பக்தர்கள் என்னை அழைக்கின்றனர். நான் செய்ய வேண்டிய பணிகள் காத்திருக்கின்றன" என்றார். இந்த வார்த்தைகளை அவர் கூறுகையில், அவரது தலையை சுற்றி கண்களை குருடாக்கும் ஓர் ஒளி வட்டம் தோன்றியது.நேராக அவரது பக்தர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திற்கு சென்றார். மரங்களின் கீழே இருந்த ஒரு பாறைமீது அமர்ந்து கொண்டார். எல்லா திசைகளிலிருந்தும் பக்தர்கள் மலர்களும், பழங்களும் கொண்டுவந்து குவித்தனர். பாபாவின் முதல் உபதேசம் அங்குதான் ஆரம்பித்தது.

'மானஸ பஜரே குரு சரணம்
துஸ்தர பவ சாகர சரணம்' 
(இளம் சாயி முதல்முதலாக பாடிய பஜனைப்பாடல்) 

மேலும் இது குறித்து பாபா தன்னுடைய அருளுரையில்  கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்... 

உரவக்கொண்டாவில் நான் என்னைப் பற்றிப் பிரகடனம் செய்த பொழுது நான் கொடுத்த முதல் பாடம், “மானஸ பஜரே குரு சரணம், துஸ்தர பவ சாகர தரணம்” ஆகும். அதாவது, முதலில் நீங்கள் இந்தப் பிறப்பு மற்றும் இறப்பின் சுழலில், பிறவிக் கடலில் (பவ ஸாகரம்) இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்; பின்பு அதனைக் கடப்பதற்கு (தரணம்) உறுதி பூணுங்கள்; பின்பு உங்களுக்கு விருப்பமான ஒரு கடவுளின் திருநாமம் மற்றும் திருவுருவத்தின் மீதோ சிந்தனை கொண்டு; இறுதியாக, அவருடைய புகழைப் பாடும் பஜனை செய்யுங்கள், ஆனால் உங்கள் முழு மனத்துடன் செய்யுங்கள். இந்த பரஸ்பரத் தொடர்பு எனும் சத்தியத்தில் மயங்கி உழல்பவன் “சம்சாரி”; இது தொடர்பின் உண்மையே தவிர, முழு உண்மையல்ல என்ற உணர்வில் விழித்திருப்பவன் “சாதகன்”._

– தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 1964



இந்த புகைப்படம் எடுக்கும்போது சீரடி பாபா சிலை இருந்த இடத்தில் வெறும் கல்தான் இருந்தது. போட்டோகிராபர் புகைப்படம் எடுக்கும்போது அந்த கல்லை எடுக்குமாறு கேட்டார். ஆனால் இளம் சத்யாவோ அதனை எடுக்க மறுத்துவிட்டார்.மாறாக அந்த கல் அப்படியே புகைப்படத்தில் தெரியும்படி போட்டோ எடுக்கச் சொன்னார். பின்பு போட்டோ டெவலப் செய்த பிறகு தான் தெரிந்தது. அந்த கல் இருந்த இடத்தில் சீரடி பாபாவின் சிலை இருந்ததென்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக