தலைப்பு

வெள்ளி, 11 அக்டோபர், 2019

பேதம் நீங்கி போதம் பெற்ற அபேதானந்தர்!


திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமண மகரிஷியின் நெடுநாளைய பக்தரான சுவாமி அபேதானந்தர் அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்... 

சீடன் தயார் நிலைக்கு வந்தவுடன் அவனுக்கு ஒரு குரு தோன்றி விடுகிறார் என்று சொல்லப்படுகிறது. பகவான் ரமண மகரிஷியின் நெடுநாளைய பக்தர், சுவாமி அபேதானந்தர் அவர்கள், ஆன்மீகத்தில் சிக்கிக்கொண்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் குழப்பத்தில் தவித்து, பகவானை பிரார்த்தித்து, பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
தனக்கு வழி காட்டுமாறு எழுதியவருக்கு கஸ்தூரியும் பதிலளித்தார்.
சுவாமி அபேதானந்தர் ரமணாஸ்ரமத்தில்,  திருவண்ணாமலையில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்_ தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார் என்றும் சொல்லலாம் .ஒரு பிரச்சனை அவரை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. பகவான் சத்திய சாயியின் வாழ்க்கை பற்றி, கஸ்தூரி அவர்கள் எழுதிய, "சத்யம் சிவம் சுந்தரம்" புத்தகத்தை அவர் வாசித்திருந்தார். அதை படித்துக்கொண்டு இருந்த பொழுதே, தன்னை குழப்பத்தில் இருந்து விடுவிக்க கூடிய குரு, 25 ஆண்டுகளாக சாதனை புரிந்த, புட்டபர்த்தியில் உள்ள வரே, என்று உணர்ந்தார். பேராசிரியர் கஸ்தூரிக்கு கடிதம் எழுதி, தனது நிலையை பகவானிடத்தில் தெரிவித்து, சாயியின் பதிலை அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

நேரம் மெல்ல நகர அவரும் உறங்கிவிட்டார். அனேகமாக இரவு முடியும் தருவாயில், தலையில் பலமாக ஒரு அடி விழ, விழித்துக்கொண்டார். யாராக இருக்கும்? கதவு தாளிடப்பட்டு இருக்கிறது. அவர் மட்டுமே அறையில் உள்ளார். எழுந்து விளக்கைப் போட்டார். ஒருவருமே இல்லை. பிரமிப்பு மாறாமலேயே படுக்கையில் அமர்ந்தார்.  தன் கண்முன்னே ஒளிக்கற்றைகள்! அதனின்று ரமண மகரிஷி மற்றும் பகவான் சத்திய சாயி இருவரும் ஒரே வடிவில் தோன்றினா். அவர் ஏற்கனவே புத்தகத்தில் பார்த்த அதே வடிவம்; ரமணமகரிஷி மறைந்து, பாபாவும் மறைந்தார். ஒளி மட்டும் இருந்தது. அந்த ஒளியில் இருந்து தெளிவான இனிமையான குரல் கேட்டது;
"நீ உனது சாதனாவின் சிக்கலில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்பதை கூற வந்துள்ளேன். நீ உனது மனதின் எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே. அது ஆட்டி வைக்கும் நிலைக்கு இடம் கொடாதே. தியானம் கூட செய்யாதே" என்றார். அதுதான் தீர்வு என நினைத்தார்.

அதன் பிறகு அவ்வப்போது கஸ்தூரி அவர்களுக்கு கடிதம் எழுதி, தன்னை சுவாமி தெளிவடைய செய்ததை தெரியப்படுத்தினார். பிறகு ஒருமுறை அபேதனந்தாஜீக்கு அழைப்பு வர, புட்டபர்த்தி சென்றார். சுவாமியும் அவரை அன்புடன் வரவேற்றார். தன்னை சீடராக ஏற்றுக் கொண்டதை உணர்ந்தார். நேரிலும் சாயி அதே அறிவுரைகளைக் கூறினார். கனவில் கேட்ட அதே குரலை, நேரில் பாபாவிடம் கண்டுகொண்டார்.


மொழிபெயர்ப்பு: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக