தலைப்பு

திங்கள், 14 அக்டோபர், 2019

நன்றி மறப்பது நன்றன்று - திரு. ரிச்சர்ட் மோஹன்


தமிழ்நாடு மாநில, ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களுக்கு வருடத்தில் மூன்று முறை பிரசாந்தி சேவை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் 15 நாட்கள், மே மாதம் 15 நாட்கள் மற்றும் அக்-நவ மாதம் 30 நாட்கள். மார்ச், மே மாதங்களில் குறைந்தது 7 நாட்களும், அக்-நவ மாதங்களில் குறைந்து 10 நாட்களும் சேவையில் கலந்து கொள்ளலாம். பிரசாந்தி நிலைய
வளாகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட வாய்ப்பளிக்கும் இந்த பிரசாந்தி சேவையில் பாரத தேச சாயி நிறுவனத்தினரால் மட்டுமே பங்குகொள்ள முடியும். அதேபோல் வெளிநாட்டில் வாழும் சாயி நிறுவன உறுப்பினர்கள் கூட ஒரு குழுவாக வந்தால், மத்திய அறக்கட்டளையின் முன் அனுமதி பெற்று சில குறிப்பிட்ட சேவைப்பணிகளில் ஈடுபடலாம். தனிநபர்கள் சேவை செய்ய விருப்பப்பட்டால், பிராசாந்தி நிலைய வளாகத்தில் செயல்படும் மேற்கத்திய உணவகத்தில் (Western Canteen) உணவகத்தின் நிர்வாகிகளின் முன் அனுமதி பெற்று சேவையில் ஈடுபடலாம்.

இந்தப்பதிவில் பிரசாந்தி சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழும் நம் தமிழகத்தை சேர்ந்த ஒரு சாயி அன்பரை பற்றி பார்ப்போம்...  

கோயம்புத்தூரை சேர்ந்த சாயி சகோதரர் திரு. ரிச்சர்ட் மோஹன் அவர்களை அறிந்தவர் பலர்.

தனது தனித் திறமையான புகைப்படம் எடுத்தல் மற்றும் digital designing ஆகியவைகளை பகவானின் சேவைக்காக அர்ப்பணம் செய்து வாழ்ந்து வருபவர்.

அதுமட்டுமல்லாமல், பிரசாந்தி சேவைக்கு தொடர்ந்து ஆண்டுதோறும் சென்று வருபவர்.

அவர் செய்யும் சேவைகள் அனைத்தும், பகவானுக்கு செய்யும் #நன்றிக்கடனாக செய்வதாக அவர் கூறுவார்.

2009ம் ஆண்டில், பகவானின் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர், அதன் பின் தீவிரமாக சாயி பணிகளில் ஈடுபாடு கொண்டார். 

பிரசாந்தி சேவை பற்றி, இவ்வாண்டு முதல் பேட்ச் சேவையில் கலந்து கொண்டுள்ள அவர் பகிர்ந்த வாட்சப் பதிவு உங்களுக்காக...

"2009ம் வருடம் என் இதய அறுவை சிகிச்சை முடிந்து, 2012 இல் வாய் புற்று அறுவை சிகிச்சை முடிந்து, type 2 சர்க்கரை குறைபாடு இருப்பினும், முழு மன, உடல் திருப்தியில் 20 சாய் சேவை (பிரசாந்தி சேவை) செய்ய முடிந்தமைக்கு, பகவானின் அருளும், அசையா ஆன்மீக உறுதியுமே காரணம்.

செயல்படுவதற்கு சூழ்நிலை, வயது, உடல் பலம் தேவை இல்லை. ஆழ்ந்த இறை பக்தி, மன பலம் இருந்தால் போதும்.  

சேவைக்கு செல்லாமல் இருப்பதற்கு காரணமாக வயதும், உடல் உபாதைகளும் இருப்பதாக சொல்வது ஒரு சாக்கு போக்கே.

இது என் பிரத்தியேக சொந்த கருத்து".

அவருடைய கருத்தில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. நாமும் பகவானுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்பதில் ஐயமில்லை. வாருங்கள் நன்றி மறவாமல் இருப்போம், பிரசாந்தி சேவையில் இணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக