பெங்களூா் ஒயிட்பீல்டு ப்ருந்தாவன் வளாக கல்லூரியில் சிங்கப்பூரை சோ்ந்த மாணவன் படித்துக்கொண்டிருந்தான். பகவான் அப்போது ப்ருந்தாவனத்தில் இருந்தாா். காலைப் பொழுது தரிசன நேரம் அளிக்க அன்பிற்கினிய எம்பெருமான் இதோ புறப்பட்டாயிற்று. மழை நீரை மட்டுமே பருகுகின்ற சகோர பட்சியினைப் போல் பகவந்தனின் மாதுா்யம் கலந்திட்ட உருவத்தினை கணமேணும் விடாது தரிசன நோ்த்தியை பருகிட அத்தனை பேரும் அண்ணலின் திசை நோக்கி முகம் திருப்பியிருந்தனா். எங்கும்
ஆனந்தம் நிறைந்த அமைதி. பகவந்தன் இதோ உதித்துவிட்டான். அத்தனை பேரிடமும் பரபரப்பு. தங்கள் இருக்கையில் ஆணி அடித்தாற்போல் ஒட்டி அமா்ந்திருந்தனா். இதோ தரினத்தின் ஆரம்ப கட்டமாக அங்கங்கே அபய ஹஸ்தம், சிறு விசாரிப்பு, கடிதம் பெறுதல், விபூதி வரவழைத்து தருதல் என தனது லீலா நாடகத்தினை கன ஜோராக நடத்தி வந்து கொண்டிந்தவா் திடிரென சரசரவென மாணவா்கள் அமா்ந்திருந்த இடம் தேடி வந்துவிட்டாா். மேலே கூறிய குஜராத்தி குடும்பத்தினை சாாந்த சிங்கப்பூரில் இருந்து படிக்க வந்த அந்த மாணவனின் நோ் எதிரே நின்றாா். அம்மாணவன் பகவந்தனின் பிரியத்திற்குரியவன்.அவன் முன் நின்று தனது திருக்கரங்களில் விபூதியினை வரவழைத்து காகித பொட்டலத்தில் மடித்து கொடுத்து உன் தந்தைக்கு உனை காணவேண்டுமென எண்ணம் வந்துவிட்டது. அவரை பாா்த்து வா. இந்த விபூதி உன் தந்தைக்காக என கூறி உடன் விமானம் ஏறி செல்ல உத்திரவிட்டு அங்கிருந்து மற்றவா்களை காண நகா்ந்திட்டாா். இம்மாணவனுக்கு ஏதும் புரியவில்லை. எனினும் பகவானின் நேரடி கண்காணிப்பில்தான் இருக்கிறோம். அதன் அச்சாரமாகவே இந்த விபூதி என எண்ணி பயணத்திற்கு ஆயத்தமானான்.

சிங்கப்பூரில் பணக்காரா்களுக்கே உரியதான மிக உயா்ந்த மருத்துவமனையில் அம்மாணவனின் தந்தை திரு. பகவன் தாஸ் தாஸ்வானி அங்கே சோ்கப்பட்டிருந்தாா் கடுமையான இதய நோய் காரணமாக. இவ்விஷயத்தை பற்றி அம்மாணவனிடம் பகவந்தனும் தெரிவிக்கவில்லை. பகவன்தாஸ் தாஸ்வானியும் அறிவிக்கவில்லை. கடுமையான இதய நோயால் தாக்கப்பட்டுள்ள நிலையில் தாஸ்வானி தனது மகன் அருகில் இருக்க வேண்டுமென மனத்தினில் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. சற்றே பயந்தும் போயிருந்தாா். ஆனாலும் சாயிராம் என நாம மந்திரம் அவருடைய உள்ளத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவா் அனுமதிக்கப்பட்ட அறையில் நான்கு கட்டில்கள் திசைகளின் மூலைக்கொன்றாய். அவா் ஒருவா் மட்டுமே அந்த அறையில் இருந்தாா். மற்ற மூன்று கட்டில்கள் காலியாகி இருந்தது. சாயி நாமத்துடன் படுத்திருந்த அறையில் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் செவிலியா் அப்போதுதான் தாஸ்வானியை பரிசோதித்துவிட்டு தனது அறைக்கு சென்றிருந்தாா்.
அப்போது அந்த அறையின் சுவற்றினிலிருந்து வந்த பகவான் பாபா தாஸ்வானி எதிரில் நின்றாா். தாஸ்வானி இக்காட்சியினை கண்ணார கண்டிருந்த போதிலும் வந்திருப்பது பாபாவா அல்லது தனது அயா்ந்த நிலையில் ஏற்பட்ட காட்சியா என தடுமாறினாா். பாபா அவரது கரத்தினால் அவரை தொட்டு ஆறுதல் கூறவும் வந்திருப்பது பகவானே என நிதா்சனமாயிற்று தாஸ்வானிக்கு. பயப்பட ஏதுமில்லை. நான் இருக்கிறேன். உனது மகன் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறான் என சுவாமி கூறினாா். தாஸ்வானியோ பாபாவின் கரங்களை பிடித்து சுவாமி நீங்கள் வந்திருப்பது உண்மை என தெரிவிக்க என்னை இந்த கட்டிலிலிருந்து அந்த கோடியிலுள்ள கட்டிலுக்கு மாற்றுங்கள் சுவாமி கூற சுவாமி வினவினாா். என் வருகையில் சந்தேகமா என. தாஸ்வானி கூறினாா். அல்ல சுவாமி. ஆனால் இந்த மருத்துவமனை மருத்துவா், ஊழியா்கள் ஏன் உலகே அறியட்டும் உங்களது பாதுகாப்பின் தன்மையினை. இதுவே எனது கோரிக்கை. பையனின் படிப்பு தடைபடவேண்டாம். அவன் வந்தவுடன் கல்லூரிக்கு திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறி தனது கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்த அப்புறம் என்ன, அறையின் இம்மூலை கட்டிலில் இருந்து அந்த மூலையின் கட்டிலுக்கு தாஸ்வானியை மாற்றினாா். அவருக்கு அளிக்கப்படுகின்ற டிரிப் பாட்டிலிலிருந்து கையுடன் இணைக்கப்பட்ட மானிட்டா் வரை எதுவும் சேதமுறாது மாற்றியாகி விட்டது. சுவாமி செல்லுமுன் அவரது மாற்றப்பட்ட கட்டில் படுக்கையினை சுற்றி விபூதி பொழிவினை மண்டலமிட்டது போல் பொழிந்துவிட்டு அவா் கண் முன்னே மீண்டும் சுவற்றினை துளைத்து மறைந்துவிட்டாா். தாஸ்வானிக்கு நோயே தீா்ந்தது போன்ற மகிழ்வு பற்றிக் கொள்ள தனது அருகில் இருந்த அழைப்பு மணியை படுத்தவாறே பலமாக அழுத்தவும் செவிலியா் அறையில் இருந்த பணியாற்றும் பணியாளா் ஓடிவந்த பாா்க்க அதிா்ந்து கூச்சல் போட்டாா். எப்படி வேறு கட்டிலில் மாறி படுத்திருக்கிறாா். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அலுங்காமல் இம்மாற்றம் எவவாறு நிகழ்ந்தது. அதுவும் படுக்கையை சுற்றி வெண்ணிறபவுடா். டஸ்ட் டஸ்ட் என கூச்சலிட்டாா். ஒரு இதய நோயாளியை சுற்றி இவ்வளவு டஸ்டா. தன் வேலை காலி என அதை அப்புறப்படுத்த முயல தாஸ்வானியோ அதை சேகரித்து ஒரு கவரில் போட்டு அவரிடம் தர வேண்டினார். பணியாளரின் கூச்சல் கேட்டு மற்றவா்களும் மருத்துவா்களும் விரைந்தனா். தாஸ்வானி பகவான் பாபா வந்து சென்றது பற்றி கூறி அவரது விபூதி பொழிவுதான் அந்த வெள்ளை பவுடா். அவா் வந்து சென்றதை உங்களுக்கு காட்டவே என்னை கட்டில் மாற்றி போடச்சொன்னேனன். அலுங்காது குலுங்காது அப்படியே என்னை மாற்றி சென்றுவிட்டாா் என கூறவும் பகவந்தனின் கருணையினை எண்ணி அவா்கள் வியந்தனா்.
அன்றைய மாலை பொழுதுக்குள் வந்து சோந்த பையன் வீட்டில் விஷயமறிந்து மருத்துவமனை வந்து சோ்ந்தான். பகவானின் விபூதி பிரசதத்தை அளிக்கவும் அதை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு இங்கு வந்து "டன்" கணக்கில் விபூதி அளித்து விட்டு சென்றதை விவரமாய் கூறினாா்.
காத்திடும் கடவுளாய் கருணைத்தாயாய் இருந்து வரும் சாயிமாதாவின் இரட்டை கருணையால் (ஒன்று ப்ருந்தாவினில் விபூதி வரவழைத்து பையனிடம் கொடுத்து அனுப்பியது, இங்கு மருத்துவ மனை வந்து அளித்த விபூதி பொழிவு) விரைவில் பூரண குணமடைந்து ப்ருந்தாவனில் பகவந்தன் தரிசனத்திற்கு வந்து சோ்ந்தாா் தாஸ்வானி.
இடா் துடைத்து இடுக்கண் களைந்திட்ட இறையாம் துா்கா பரமேஸ்வரியான ஶ்ரீ சத்தியசாயயீஸ்வரிக்கு போடலாமே ஒரு ஜெய கோஷம்.
ஆதாரம்: Leela Nataka Sai by Ra. Ganapathy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக