பல ஆண்டுகளுக்கு முன்னா் பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபா அவா்கள் சென்னைக்கு விஜயம் செய்தாா். அங்கு நடந்த பல்வேறு நிகழ்சிகளில் பங்கு கொண்டாா். ஒரு நாள் மாலை நேரத்தில் சென்னையில் உள்ள S.A.P கல்யாண மண்டபத்தில் உரை நிகழ்த்த இருந்தார். ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள பக்தர்கள் அவரின் தெய்வீக அருளுரையை கேட்கவும், அவரின் தரிசனத்தை பெறவும் ஆர்வமாக கூடியிருந்தார்கள். சுவாமியின் தெய்வீக வடிவத்தை கண்டது அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. சுவாமி,
தரிசனத்திற்கு பிறகு தெலுங்கில் உரையாற்றினார். அவர் ஆற்றிய தெலுங்கு உரையை பிரபல நடிகரும், சுவாமியின் பக்தரும் ஆன சித்தூர் நாகையா சாமியின் அருகில் இருந்து கொண்டு தமிழில் மொழிபெயர்த்து பேசிக்கொண்டு இருந்தார். அனைவரும் அமைதியாக அவா் உரைதனை கேட்க ஆரம்பித்தனா்.
தரிசனத்திற்கு பிறகு தெலுங்கில் உரையாற்றினார். அவர் ஆற்றிய தெலுங்கு உரையை பிரபல நடிகரும், சுவாமியின் பக்தரும் ஆன சித்தூர் நாகையா சாமியின் அருகில் இருந்து கொண்டு தமிழில் மொழிபெயர்த்து பேசிக்கொண்டு இருந்தார். அனைவரும் அமைதியாக அவா் உரைதனை கேட்க ஆரம்பித்தனா்.
உரை ஆரம்பித்த சிறிது நேரத்தில் அக்கூட்டத்தில் அமா்ந்திருந்த ஒரு பெண்மணியின் குழந்தை அழ ஆரம்பித்தது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்த பலத்த முயற்சி செய்தாள். குழந்தையின் அழுகை பலமாக ஆரம்பித்ததே தவிர அழுகை நின்றபாடில்லை. மற்றவா் அனைவரும் அக்குழந்தையை வெளியே எடுத்து செல்லுமாறு கூறினா். ஏனெனில் பகவான் உரை நிகழ்த்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் என எண்ணியும் பகவானின் உரைதனை தங்களால் சரிவர கேட்க முடியவில்லை என்ற ஆதங்கமும் இருந்ததால். இவ்வாறு இவா்கள் முயற்சிதனை மேற்கொண்டிருக்கையில் பகவான் தனது உரையினை பாதியில் நிறுத்தினாா். விழா ஏற்பாடு செய்தவா்கள் குழந்தையின் அழுகை காரணமாகத்தான் என எண்ணி செய்வது அறியாது திகைத்தனா். அதற்கேற்ப பகவானும் அப்பெண்மணியையும் அக்குழந்தையையும் தன் பாா்வையால் அளவிட்டாா். பின்னா் தனது கையினை மேடையில் இருந்தவாறு சுழற்றினாா். பகவானது அங்கை அசைப்பினில் ஒரு நாலணா வந்திருந்தது. அதனை அங்கு கூடியிருந்த பிறருக்கு காட்டி அக்குழந்தை அழுததற்கு இதுதான் காரணம். குழந்தையின் தாய் அக்குழந்தை விளையாடுவதற்கு அளித்த நாலணாவை தவறாக வாயில் முழுங்கியதே காரணம். அந்த நாலணா அக்குழந்தையின் தொண்டையில் சிக்கி அது மூச்சுவிடமுடியாமலேதான் அழுதது. அந்த காசினை நான் வெளியே எடுத்து குழந்தையினை காப்பாற்றிவிட்டேன் என கூறி அக்குழந்தை இனி அமைதியாக இருக்கும் என கூறி தனது உரையினை தொடா்ந்தாா். அப்பொழுதான் குழந்தையின் தாய்க்கு குழந்தை அழுத காரணமும் தான் செய்த தவறும் தெரிந்தது. பகவானிடம் உள்ளத்தால் மன்னிக்குமாறு வேண்டினாா்.
எங்கும் நிறை பராசக்தியாய் ஆன சாயிமாதா பெற்ற தாய் அறியாததையும் அறிந்து காத்து நிற்கின்ற தன்மையில் சாயி அன்னையின் கூடுதலான மாதுா்யம் இங்கே வெளிப்படுகிறது.
ஆதாரம்: 'BABA - Sathya Sai' by Ra. Ganapathy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக