தலைப்பு

வியாழன், 6 ஜூலை, 2023

நகர சங்கீர்த்தனம்!! (பேராசிரியர் ஸ்ரீ N. கஸ்தூரியின் கவிதை)


பொற்கால விடியலின் அமைதியிலே...!


இறைவனின் கீர்த்தி ஆகாயத்தில் எங்கும் பரவியிருக்கிறது!


இறைவனின் புகழ் 

தெருவில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது!


இறைவனின் நாமம் 

கதவின் வழியே 

பொழிந்து கொண்டிருக்கிறது!


இறைவனின் நறுமணம் 

அறையை நிரப்பிக் கொண்டிருக்கிறது!


அது 

குளிர்ச்சியாக 

சுகமாக 

அமைதியாக இருக்கிறது!


இனியும் என்னால் 

உறங்க முடியாது!


ஏதோ ஒன்று என்னை 

எழுப்பிக் கொண்டே இருக்கிறது!


விழித்தெழுந்து 

பகவானைப் புகழ 

என் கரங்களைக் குவிப்பதற்கு

(என்னுடைய ) ஆன்மா  

என்னை அழைக்கிறது!


என்னுள்ளே இருக்கும் இறைவன் 

புளகாங்கிதம் அடைகிறார்!

அது என்னை 

பரவசத்தில் 

மூழ்கச் செய்கிறது!


பாக்கியம் செய்த 

மக்கள் கூட்டம் 

இங்கு வருகிறது! 


நான் என்னுடைய 

இதயத்தின் ஜன்னலை திறப்பேன்!


தெய்வீக ஆனந்தத்தை 

முழுவதும் அருந்துவேன்!


அவர்கள் வருகின்ற 

காலத்தைக் குறிப்பேன்! 

பாடல்களை இனிய நாதத்தில்

பாடுவேன்!


எனக்கு இனியும் 

உறங்குவதற்கு 

உரிமை இல்லை!


என்னுடைய 

கண்கள் இரண்டும்

பெருந்தாகத்துடன் 

விழித்துக் கொள்கின்றன...!


நான் 

ஆழத்தில் 

இணைந்துவிட வேண்டும்!


மேலெழுந்த வாரியாக 

இருப்பதை எல்லாம் விட்டுவிடுவேன்!

அவர்கள் 

ஆட்டம் பாட்டு மேளத்துடன்

மற்றொரு நாளுக்காக 

திரையைத் 

தூக்கியிருக்கின்றனர்! 


"நன்கு செய்திருக்கிறாய் 

வீட்டிற்கு போ!" என்று 

இறைவன் எனக்கு வழிகாட்டி

தட்டிக் கொடுத்திருக்கும் 

பாகத்தை நான்

செயலாற்ற வேண்டும்!


(சனாதன சாரதியில் திரு கஸ்தூரி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் தமிழாக்கம்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக