தலைப்பு

செவ்வாய், 4 ஜூலை, 2023

கனவில் ஓம் எழுதி நேரில் சேர்த்த பாபாவின் ஓம்கார அற்புதம்!

எவ்வாறு ஒரு பக்தைக்கு பாபா கனவில் தோன்றி..  தான் வரும் அந்தக் கனவு கனவல்ல நிஜம் என்று உணர வைக்கிறார் எனும் அற்புத சம்பவம்.. சுறுக்கென்று சுவாரஸ்யமாக இதோ...


பகவானின் பாத கமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.என் பெயர் ஜெய சாவித்திரி. கணவர் பெயர் கபாலீஸ்வரன். எங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாமியுடன் கூடிய அனுபவங்களை சொல்வதற்கு வாய்ப்பு கொடுத்த பகவானுக்கும் ஸ்ரீ சத்ய சாய் யுகம் குழுவுக்கும் நமஸ்காரங்கள்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஜனா மண்டலியியில் உள்ளோம். நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது என் பாட்டி மூலமாக பாபாவை பற்றி சிறிதளவு தெரியும். ஏதாவது பொருள் காணவில்லையென்றால் என் பாட்டி ஒரு ரூபாய் காசு பாபாக்கு எடுத்து வை கிடைத்து விடும் என்பார்கள். அது நிறைய கிடைத்திருக்கிறது.


நீண்ட இடை வெளிக்குப் பிறகு 96 வருடம் எங்கள் தாய் மாமா திரு நாகராஜன் அவர்கள்  பஜனை பற்றிய பந்ததியை சொல்லிக் கொடுத்தார்.எங்கள் ஊரில் ஏழு நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும்   பஜனை நடத்தி வைத்தார் மாமா.அவர்தான் எங்களுக்கு குருவாக இருந்தார்.

1996 வருடம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி ஞாயிறு அன்று எங்கள் வீட்டில் பஜனை செய்வதாக இருந்தது. முதல் நாள் 13 தேதி  இரவு எனக்கு கனவு வந்தது. இது தான் என்னுடைய முதல் அனுபவம். சுவாமியிடம் புது நோட்டு பேனாவுடன் நின்று கொண்டு இருக்கிறேன். சுவாமி என்னை கூப்பிட்டு நோட்டில் ஓம் என்று எழுதிக் கொடுத்தார்!  அத்துடன் கனவு முடிந்தது. மறு நாள் பஜனையில் சுவாமி படம் அருகில் புது நோட்டுடன் பேனா வைத்து பஜனை முடிந்து பார்க்கையில் நோட்டில் ஓம் எழுதியிருந்தது! எங்களுக்கு  வார்த்தைகளால் சொல்ல முடியாத சந்தோஷம். அதை போட்டோ எடுத்து கவனமாக வைத்துள்ளோம். 

அதிலிருந்து சுவாமியிடம் நம்பிக்கையும் பக்தியும் அதிகரித்தது.அதற்கு அடுத்த வாரம் பஜனையில் சுவாமி படத்தில் விபூதியும் அருளியிருந்தார்! (அதன் படமும் இணைத்துள்ளோம்) இப்படித்தான் சுவாமியுடன் கூடிய எங்களது பயணம் ஆரம்பமானது. இதற்கு வித்திட்ட பகவானுக்கும் எங்கள் மாமா விற்கும் வணக்கங்களை தெரிவிக்கிறோம்!

✍️திருமதி. ஜெயசாவித்திரி கபாலீஸ்வரன், மயிலாடுதுறை 


இப்படியாகவே பாபா ஓம் என்று அந்த பக்தையின் ஆன்மீக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி இட்டிருக்கிறார்! அது பிள்ளையார் சுழி மட்டுமல்ல அதுவே பாபா சுழி! தலையின் சுழியை மாற்றி அமைக்கும் தெய்வீகச் சுழி! அந்தச் சுழியாலேயே இன்றளவும் சுடர்விடுகிறது சாயி வழி! அந்த வழியால் நம் அனைவருக்கும் திறந்து ஆன்மா பெறட்டும் ஞான விழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக