தலைப்பு

செவ்வாய், 25 ஜூலை, 2023

நன்கொடை தேவையில்லை என்று செக்'கை பாபா திருப்பி அனுப்பினார்!

அன்று போல் அந்தப் பொற்காலம் இன்று வாராதோ என்ற அளவிற்கு பேரிறைவன் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் சுவாரஸ்யமாக இதோ...


அவர் பெயர் டாக்டர்.சி.தட்சிணா மூர்த்தி! புதுடெல்லி அவரது இருப்பிடம்! தனது பொன்னான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்! 

அது 1962.  பாபாவின் பக்தர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டு நன்கொடையாக ஒரு சிறிய தொகையை டாக்டர் பாபாவுக்கு அனுப்புகிறார்! அது சிவராத்தி விழா செலவுக்காக அவர் அனுப்பிய செக்! 

செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது! ஆகவே பாபா ஒரு வாரத்திற்குள்ளாகவே

"பக்தி செய்வது மட்டுமே பாபாவை திருப்திபடுத்தும் என்றும்...இதிலேயே பாபா மகிழ்ச்சி அடைந்ததாகவும், தொடர்ந்து இதே நல்வழியில் நடக்கணும் படியும் எழுதி அந்த செக் அப்படியே திருப்பி அனுப்பப்படுகிறது!

இந்த உலகில் இப்படி ஒருவரா? என்று ஆச்சர்யப்படுகிறார் டாக்டர்!

சில நாட்களிலேயே டாக்டரின் முகவரிக்கு சிவராத்திரி பிரசாதமாக ஒரு விபூதி பொட்டலமும் பாபா அனுப்பி வைக்கிறார்! மேலும் டாக்டர் பரவசப்படுகிறார்!

பாபாவின் பேரன்பை அந்த விபூதியை தொடுகிற போது பாபாவின் ஸ்பரிச தீட்சையே பெறும் பேருணர்வை அவர் அடைகிறார்!

விபூதி வீட்டுக்கு வந்த அந்த சமயத்தில் தான் டாக்டரின் மூத்த மகள் தலைவலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்! மற்ற டாக்டர்கள் கவனித்தும் குணமாகவில்லை! தலைவலியே தலையாகிவிடும் அளவிற்கு வலி! படிப்பையும் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற சூழல்! விபூதியும் வருகிறது.. பாபாவை நேரடியாக வேறொரு பக்தர் அழைத்துச் செல்ல,மகளுக்கு தரிசனமும் கிடைக்க.. டாக்டரின் மூத்த மகளின் தலையில் குடைந்து கொண்டிருந்த வலி குட்- பை சொல்லி வெளிநடப்பே செய்துவிடுகிறது! தகப்பன் என்ற முறையில் பெருப்திருப்தி அடைகிறார் டாக்டர்! பாபாவின் பெருங்கருணையின் மீது பெருத்த பிடிமானம் அவருக்கு ஏற்படுகிறது!


அது 1962. பாபா ஐதராபாத்திற்கு விஜயம் செய்கிறார்! டாக்டருடைய பேராசிரியர் வீட்டில் டாக்டர் பாபாவின் தரிசனம் பெறுகிறார்! அது அந்த பேராசிரியர் வீட்டு கிரகப்பிரவேசம்! அதையும் பாபா அனுகிரகம் புரிகிறார்! அங்கே நிகழ்ந்த பல மகிமைகளுக்கும் டாக்டர் நேரடி சாட்சியாக திகழ்கிறார்! 

நொடிக்கு நொடி பரவசம் பெறுகிறார்! 

"உன்னை நான் தனியாக சந்திக்கிறேன்!" என்று பாபா சொல்லியதால்... அந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கிறார் டாக்டர்! ஆனால் அது அமையவே இல்லை.. பாபா மீண்டும் புட்டபர்த்தி செல்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது! சரி இனிமேல் நம்மை அழைக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்து டாக்டர் கண்கலங்க.. ஒரு சிறு குழந்தை "பாபா அழைக்கிறார்!" என்று அழைக்கிறது! ஆச்சர்யப்படுகிறார்! இந்த அழைப்பை.. அதுவும் கிளம்புகிற அந்த பரபரப்பு நேரத்தில் டாக்டரோ எதிரே பாராதது!

பிறகு பாபாவோடு தனியறையில் அமர்ந்து பாபாவை பார்த்துக் கொண்டே இருக்கிறார்! ஒரே பரவசம்!

"நான் உன்னை 25 ஆண்டுகளுக்கு முன்பே அறிவேன்!" என்கிறார்!

முதலில் புரியாது போக.. பிறகு டாக்டருக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது!


அது 1940. அப்போது டாக்டர் கர்னூலில் இருக்கிறார்! அந்த சமயத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஒரு சத்ரிய சிறுவன் மனிதர்களிடம் இல்லாத அசாத்திய சக்தியை பெற்று சுவாமியாகிவிட்டதை கேள்விப்படுகிறார்... சந்திக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்த போதும் அது நிகழவில்லை.. அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல அது சாட்சாத் பேரிறைவன் சத்ய சாயியே என பிற்காலத்தில் உணர்ந்து கொள்கிறார்! அதைத் தான் பாபா தற்போது மறைமுகமாக உணர்த்துகிறார் என்பதை டாக்டர் புரிந்து கொள்கிறார்!

ஸ்பரிச தீட்சையும் பெறுகிறார்! நேரம் போவதே தெரியவில்லை! அரை மணி நேரம் கடந்து போகிறது! இதுவரை வாழ்க்கையில் ஒரு போதும் அனுபவிக்காத மிகப் பெரிய பேரானந்தத்தை டாக்டர் பாபா உடனான அந்த தனிச் சந்திப்பில் அனுபவிக்கிறார்!


அது முதல் பல உதவிகள்! டாக்டர் எங்கு இருந்தாலும் வழிபடும் உட்குரலுக்கு பாபா ஓடோடி வந்து உதவி செய்திருக்கிறார்! விஞ்ஞானம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களின் போதும் பலமுறை டாக்டருக்கு பாபா உதவியிருக்கிறார்! இந்தியாவிலும் விஞ்ஞான ஆராய்ச்சி கூடம் வேண்டும் என்று டாக்டர் தனது மூத்த விஞ்ஞானிகளிடம் சொல்லத் தயங்கிய போதும்.. பாபாவே அந்த சூழ்நிலையை ஏற்படுத்தி.. அவரின் கோரிக்கையை முன்நிறுத்தி அதனை செயல்படுத்தவும் வைத்திருக்கிறார்!

    ஒருமுறை டாக்டரது இரண்டாம் மகள் ஜீப் விபத்திற்கு ஆளாகிறார்! பலமான அடி! மருந்துகளால் கட்டப்பட்டு 4 வாரங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்! இதனால் உடல் உஷ்ணம் அதிகமாகிறது! உஷ்ணம் தணிக்க ஆன்ட்டி பயாட்டிக்ஸ் கொடுத்தும் உஷ்ணம் தணியவில்லை...! இந்த நாள் இரவுக்குள் சரியாகவில்லை எனில் அடுத்த நாள் மருத்துவ மனையில் சேர்த்துவிடலாம் என்கிறார் மருத்துவர்!

டாக்டரோ வேதனை தாளாது பூஜையறை பாபா படத்தின் முன் உருகி வேண்டுகிறார்! அடுத்த நாள் ஆச்சர்யத்தோடு காலை விடிகிறது!

அவரது மகளின் உஷ்ணம் அப்படியே குறைந்து உடல் சமநிலையாகி விடுகிறது!


(ஆதாரம் : நூல் - பிரசாந்தி | பக்கம் - 1,2,3,4 ) 


கட்டணமில்லா இலவச ஆன்மீகமே பாபா புரிந்து வருவது! இப்படி ஒரு இலவச பரவச ஆன்மீகம் உலகில் எங்கேயும் இல்லை! அது செய்ய வேண்டும் - அத்தனை ஆயிரம் ஆகும், இது செய்ய வேண்டும் - இத்தனை லட்சம் ஆகும் என்று தேவையில்லாத எந்த செலவையும் இழுத்துவிடாமல் யாரிடமும் சுரண்டாமல், ஏமாற்றாமல், நயா பைசா பெறாமல் நம்மை ஆன்மீகத்தில் ஆழமாய் ஆட்படுத்தும் ஒரே பேரிறைவன் பாபா மட்டுமே!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: