தலைப்பு

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

கன்னம் சிவந்த கண்ணன்!


(இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்... சிறுவயதிலேயே கருணை, பொறுமை, குருபக்தி ஆகிய தெய்வீக குணங்கள் எவ்வாறு அவருடைய வாழ்வில் இயல்பாக வெளிப்பட்டன என்பதை உணர்த்தும் மறக்க முடியாத நிகழ்வு.)

பள்ளிக்கூடத்தில் சத்யா புத்திசாலி மாணவனாக இருந்ததால் ஆசிரியர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். ஒருநாள், “இந்தியாவின் பெருமையை விவரி?’ என்ற கேள்வியைக் கேட்டார் ஆசிரியர். அதுவும் பதிலை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.
புக்கபட்டினம் மாணவர்களின் ஆங்கில அறிவு ரொம்ப குறைவு. அதுவும் இந்தியாவைப் பற்றிய அறிவோ மேலும் குறைவு.

வியாழன், 23 ஜூலை, 2026

'வேதியியல்' என்றால் என்ன? 'மருத்துவம்' என்பதன் உண்மையான பொருள் என்ன?

ஜூலை 23, 1992

அன்று மாலை, அனைத்து மாணவர்களும் பகவானை விடுதிக்கு வருமாறு பிரார்த்தித்தனர்.

சுவாமி: விடுதி எங்கே இருக்கிறது? அதன் முகவரியைக் கொடுங்கள்.

மாணவர்: சுவாமி, அது எங்கே இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

சுவாமி: ஆம், எனக்குத் தெரியும். இதுவே (மந்திர்) உங்கள் விடுதி. இதுவே உங்கள் உண்மையான விடுதி.

சிறிது நேரத்திற்குப் பிறகு...

புதன், 22 ஜூலை, 2026

22 July 1957 - பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவிற்கு சுவாமி சிவானந்தர் அளித்த தெய்வீக வரவேற்பு

ஜூலை 22ஆம் தேதி 1957, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா டெல்லியிலிருந்து காரில் ரிஷிகேஷ் நோக்கிப் புறப்பட்டார். ஹரித்வாரிலிருந்து சுவாமி சிவானந்தரின் துறவிச் சீடர்கள் அவரை வரவேற்று அழைத்து வந்தனர். மாலை 6.30 மணிக்கு சிவானந்தநகரை அடைந்தபோது, சுவாமி சிவானந்தர் ஆசிரமத்தில் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பகவானுக்கு மனமார்ந்த வரவேற்பளித்தார்.

திங்கள், 20 ஜூலை, 2026

இன்று (20 ஜூலை 2026) ஶ்ரீ கிருஷ்ணரின் 5253வது அவதார தினமாகும்!

 

இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி. நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணி.

வெள்ளி, 19 ஜூன், 2026

திங்கள், 27 ஏப்ரல், 2026

புட்டபர்த்தியில் விமான நிலைய விரிவாக்கம் + புதிய Aviation Manufacturing & Service Hub!


மத்திய அரசு புட்டபர்த்தியில் உள்ள விமான நிலையத்தை (ஸ்ரீ சத்ய சாயி விமான நிலையம்) விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது...


மே 5 அல்லது 15-ம் தேதிகளில் முதல்வர் புட்டபர்த்திக்கு வருகை தர வாய்ப்பு; சுமார் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் தயார்.

புட்டபர்த்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முகவரியையே மாற்றும் வகையில் ஒரு மாபெரும் திட்டத்தை ஆந்திர அரசு தீட்டியுள்ளது. இந்தச் செய்தியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு....

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

501-550 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

 

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

சனி, 7 பிப்ரவரி, 2026

🚂 பிரசாந்தி நிலையம்(புட்டபர்த்தி) டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை!

பிரசாந்தி நிலையம் டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை! (சிக்கபள்ளாப்பூர் வழியாக)

பட்ஜெட்: ரூ. 713 கோடி

நீளம்: 103 கி.மீ

பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி) – சிக்கபள்ளாப்பூர் ரயில் பாதை மூலம் பெங்களூருவுடன் இணைக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளன. 

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

விஸ்வரூப சாயி சேவகர் விஸ்வநாதனின் அழகி!

யார் இந்த விஸ்வநாதன் ?  யார் அந்த அழகி ? 

    இன்டர்நெட் புழக்கமும் இல்லந்தோறும் கைப்பேசிகளும் பல்கிப் பெருகிய  இன்றைய சூழலில் வேண்டுமானால் இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வது சுலபமாக உணரப்படலாம்! ஆனால் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில்... நமது பாரதம் மென்பொருள் சேவைத் துறையின்  வானத்தில் சூரியனாய் சுடர்விட ஆரம்பித்த புதிதில், ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியனும் தாய்மொழியில் தட்டச்சு செய்து கணினியை இயக்கத் துடித்துக் கொண்டிருந்தான்.  அந்த சமயத்தில், தமிழ் மற்றும் இந்திய மொழிகளுக்கான ஒலிபெயர்ப்புக் கருவிகளில் (Transliteration Software) ஒரு புரட்சியைச் செய்து **'அழகி' (Azhagi)** என்ற அற்புத மென்பொருள் உருவாக்கியவர் தான் இந்த திரு. விஸ்வநாதன்! இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஒரு தமிழ் தட்டச்சு தொடர்பான பணியில் இருப்பவர் என்றால் அழகி மென்பொருளை உங்களுக்கு அறிமுகம் செய்யவோ அதன் மேன்மையை விளக்கிச் சொல்லவோ வேண்டிய அவசியமே இல்லை!  

வியாழன், 20 நவம்பர், 2025

புட்டபர்த்தியில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உரையின் முக்கிய அம்சங்கள் –நவம்பர் 19, 2025


ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பிறந்த நூற்றாண்டை கொண்டாடுவது நம்மெல்லாருக்கும் ஒரு பெரிய பாக்கியம்.

பாபா காட்டிய அன்பும் சேவையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்துள்ளது.

திங்கள், 17 நவம்பர், 2025

SAI 100 - பாபா 100வது விழாவிற்கு புட்டபர்த்தி வரும் பக்தர்களுக்காக உருவாக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் ஆண்ட்ராய்டு App

(உணவு, தங்குமிடம், தண்ணீர், பார்க்கிங் போன்ற எல்லா LIVE விபரங்களும் ஒரே appல்)

ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட SAI 100 App, இந்த நூற்றாண்டு விழாவில் உங்களுக்கு முழு வழிகாட்டியாக இருக்கும். விழாவுக்கு தேவையான முக்கியமான தகவல்களை எளிதாக பார்க்க உதவும்:

ஞாயிறு, 16 நவம்பர், 2025

ஶ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு — ஆந்திரா & தெலுங்கானா அரசுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களால் தெய்வீக அவதாரமாகப் போற்றப்படுகின்றனர். 2025 நவம்பர் மாதத்தில் நடைபெறும் அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் விழா, மாநில அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரும் ஆன்மீக நிகழ்வாக வடிவெடுத்துள்ளது. இந்த விழாவை முன்னரே ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் தமது மாநில விழாவாக அறிவித்துள்ளதால், நவம்பர் முழுவதும் பக்தி சூழல் நிலவுகிறது.

வியாழன், 13 நவம்பர், 2025

வெள்ளி, 31 அக்டோபர், 2025

பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவிற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள்!

 

இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே! காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது! கண்சிமிட்டும் நேரத்தில், மனித குலம் ஆவலுடன் எதிர்நோக்கிய மிகப் புனிதமான நாள் — பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாவது பிறந்த நாள் — நம் முன் உதயமாக இருக்கிறது.

அனேக ஜன்மங்களாக ஆன்மாக்கள் ஏங்கியிருந்த அந்த தெய்வீக தருணம், இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வியாழன், 30 அக்டோபர், 2025

சுடச்சுட இட்லி - சாயி இட்லி!

பேரிறைவன் பாபா எதையும் புரிய வல்லவர் என்பதை உணர்த்தும் ஓர் அரிய சாயி அனுபவம் இதோ..!

செவ்வாய், 21 அக்டோபர், 2025

🚂 சுவாமியின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி 50க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள்!

👆👆தெளிவாக வாசிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்!

அன்பு சாயி சகோதர சகோதரிகளே!
நம் அன்பு பகவானின் அளவில்லா கிருபையால், முன்பு தர்மாவரம் (DHM) வழியாக மட்டுமே இயங்கிய சுமார் 50 ரயில்கள், இப்போது ஶ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம் (SSPN) ஸ்டேஷன் வழியாகவும் இயங்குமாறு மாற்றப்பட்டுள்ளன அல்லது நீட்டிக்கப்பட்டுள்ளன.

வியாழன், 9 அக்டோபர், 2025

ஈஸ்வராம்பா குடும்ப உறுப்பினரின் இதயம் தொட்டு பாபா கொடுத்த பொக்கிஷம்!

(சத்ய சாயி சத்-சம்பாஷனா புத்தகம் உருவான கதை)

அற்புதமான ஒரு நூல் அதுவும் பேரிறைவன் பாபா தன் கையால் எழுதிய பக்கம் எவ்வாறு பக்கம் வந்து புத்தகமாகி இப்போது அனைவர் இதயத்திலும் அருள் பாலிக்கிறது எனும் ஓர் சிறப்பு சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

🔥 வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்! (சிறு தொகுப்பு)

பிரசாந்தி நிலையத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்ச்சியான 'வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்' நவராத்திரியில் சதுர்த்தி திதி அன்று துவங்கி, ஏழு நாட்கள் நடைபெற்று விஜய தசமி அன்று மஹா பூரணாஹுதியுடன் நிறைவடையும்.   இந்த வருடம், இந்த யக்ஞம் இன்று முதல் (26.09.2025, வெள்ளிக் கிழமை) துவங்க உள்ளது...

வியாழன், 18 செப்டம்பர், 2025

பாபா நூற்றாண்டில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் உதிர்த்த முத்துக்கள்!

 

(வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை நோக்கிய ஸ்ரீ சத்ய சாயி யுகத்தின் பயண அனுபவக் கட்டுரை)


ஸ்ரீ சத்ய சாயி யுகம் டீம் வாழும் கலை மகான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவரை சந்தித்த நாளில் ஏற்பட்ட சுவாரஸ்யமும் - குருதேவ் கொடுத்த ஆச்சர்ய அனுகிரக மொழியும் - நூற்றாண்டு செய்தியாக அதுவும் சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

451-500 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..