தலைப்பு

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சந்திராயன் சரித்திரத்தில் சாதனை படைத்த சாயி மாணவிகள்!

கல்வி வியாபாரப் பொருளாகி கைக்கெட்டாத விலையுடன் விற்கப்படும் அவல நிலையைக் கண்ட பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா , மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கவும், அவர்களது குண நல மேம்பாட்டுக்கும்  ஸ்ரீ சத்ய சாயி உயர்க் கல்வி நிறுனத்தை தோற்றுவித்தார்.  புட்ட பர்த்தியிலும், பெங்களூரிலும்  கலாசாலைகளை நிறுவி ஆயிரக்கணக்கான மாணவர்களை அதில் இணைத்து கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை உலகெங்கும் அறியச் செய்தார். அது மட்டுமின்றி  மாணவிகளுக்காக அனந்தபூரில் ஒரு கலாசாலையையும்  நிறுவி, நல் முத்துக்களாக மாணவிகளை அதில் பயிற்றுவித்து அருளினார். இன்று உலகெங்கும் சாயி மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பு வகித்து மாதவ சேவையாக மானவ சேவை ஆற்றுகின்றனர்.


அந்த வகையில் அனந்தபூர் பாபா  கல்லூரியில்  பௌதீகம் பயின்ற  மாணவி  G.உஷா அவர்கள், ISROவில் பணி அமர்ந்து, சந்திராயன் பயண வெற்றியில்  தமது பங்கை திறம்பட ஆற்றியுள்ளார். பகவான் பாபா அன்புடன் ஆசீர்வதித்து அளித்த புடவையை அவர் அணிந்து இருப்பதைப்  புகைப் படத்தில் காணலாம்.


இவர் தவிர சாயி மாணவர் சந்தோஷ் (M.Sc. Physics 2006 Prasanthi Nilayam Campus) இவரது குழு லேண்டரில் பேலோட் ChaSTe ஒன்றை உருவாக்கியுள்ளது. பேலோட் என்பது செயற்கைக்கோளின் துணை அமைப்பாகும்.ChaSTe என்பது தற்போது விக்ரம் லேண்டரில் உள்ள குழுவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். மேலும் வெங்கட லக்ஷ்மி என்னும் சாயி மாணவியும் சந்திராயன் மிஷனில் இணந்து பணி ஆற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு தெரிந்த இவர்களைத் தவிர மேலும் சில சாயி மாணவ மாணவிகளும் இப்பெருமை மிகு திட்டத்தில் இணந்திருக்கலாம். 


சாயிராம். சந்திரனோ சூரியனோ, பயணச் சாதனைகள் அற்புதமானவைதான். இவை எல்லாம் மனிதகுல நல் வாழ்வுக்கும் , குண மேம்பாட்டுக்கும்  சாதனமாகி உலகில் அமைதி நிலவ வழி வகுக்க வேண்டும். இதைத்தான் பாபா போதித்தார். இன்று அவரது மாணாக்கர்கள் இதனை அடியொற்றி செயல் படுகிறார்கள். HATS OFF TO SAI SUTDENTS.

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக