தலைப்பு

சனி, 12 நவம்பர், 2022

பஜன் செய்வதற்கு நேரமில்லை என்று கூறாதீர்கள்!


நேரமில்லை எனச் சொல்வது தமோ குணத்தையே வலியுறுத்துகிறது... சோம்பல் ஆம்பலாய் பூத்துவருகிற போது சொல்கிற வாசகம் நேரமில்லை... நேர மேலாண்மையை கடைபிடிப்பதும் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு முக்கிய பாங்கு... அதை உள்ளுணர்த்தும் வகையில் இறைவன் பாபாவே வழிகாட்ட உறுதியோடு முன்மொழிகிறார் இதோ..‌.

ஒவ்வொருவரும் ''எவ்வளவோ செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் நேரமில்லை'' என்று சொல்வதை கேட்கிறோம். பஜன் செய்வதற்கு நேரமில்லை என்று சிலர் கூறுவர். இது ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல என்கிறார் பகவான். 'நேரமில்லை என்று ஒரு முக்கியபணியை ஒதுக்குபவன் முட்டாளே' என்கிறார் பகவான்.


நேரமில்லை என்றால் என்ன அர்த்தம். அவர் கடிகாரம் நின்றுவிட்டதா? இல்லை அவர் செய்து கொண்டிருக்கும் வேலையைவிட்டு வேறு எதையும் செய்ய நேரமில்லை என்பதே வாதம். ஆனால் இல்லாதது என்னவென்றால் செய்ய வேண்டுமென்ற உத்வேகம், " மனமிருந்தால் மார்க்கமுண்டு'' என்பது மூதுரை.

ஆகவே செய்ய வேண்டுமென்ற ஒரு உறுதியை வளர்த்தால் நேரம் எப்படியும் கிடைக்கும். அதற்கென்று மனதில் இடம் வகுத்து சிந்தித்தால், வெளியிலும் அச்செயலைச் செய்ய முடியும்.

ஆதாரம்: தெய்வீக பாதை: பக்கம் 205 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக