தலைப்பு

வியாழன், 24 நவம்பர், 2022

பாபா வகுத்து தந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் செயல்படுகிறது - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

 G.Kishan Reddy - Union Minister For Culture, Tourism And Development Of North Eastern Region (DoNER), Government of India | MP - Secunderabad

தனிப்பெரும் பரம்பொருளான பாபாவின் இறையாண்மை பற்றியும்... கனிந்த பெரும் கருணைக்கடவுளான சாயியின் தீரா திவ்ய தெய்வீகத்துவம் பற்றியும்... எவ்வாறு பாபாவின் தொலைநோக்கு பேரருள் சேவையை இந்திய மோடி அரசு படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதை பாபாவின் 97 ஆவது அவதார ஜெயந்தி அன்று பிரசாந்தி நிலையத்திலேயே மத்திய அமைச்சர் சிலிர்க்கப் பேசிய பரவச உரை திகட்டா தமிழில் இதோ...


ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 97வது பிறந்தநாளின் போது மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கீழ்க்கண்டவாறு உரையாற்றினார்... 

"நான் மத்திய அமைச்சராக இங்கு வரவில்லை. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தனாக வந்துள்ளேன். ஹிந்து மதத்தை கட்டி காத்த ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஏழைகள் நலனிலும் அக்கறை செலுத்தி சமூக பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். அவர் வகுத்துத் தந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் செயல்படுகிறது. முன்னாள் துணை பிரதமர் அத்வானியுடன் சாய்பாபா பிறந்தநாள் விழாவிற்கு ஏற்கனவே வாழ்ந்துள்ளேன். ஏழைகளின் கஷ்டத்தை நீக்கி அதனை தீர்த்து வைத்து தந்தையாக பாபா விளங்கினார்.

புட்டபர்த்தி மற்றும் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் குடிநீர் என்று தவித்த போது, ​​கிருஷ்ணா நதிநீரை வரவழைத்த பெருமை பகவானையே சாரும். இது ஒரு பெரிய பணி, அற்புதப் பணி. அரசு செய்ய வேண்டிய பணியை அவர் செய்து காட்டினார்.


ஆந்திரா, தெலுங்கானாவில் முக்கிய கோவில்கள் மேம்படுத்தப்படும். யாருமே நினைத்து பார்க்கக் கூட முடியாத சாதனையை பகவான் நிகழ்த்தினார். ஏழை குழந்தைகளின் இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்து தனி மருத்துவமனை அமைத்தார். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏழைகள் பலவிதமான சிகிச்சைகள் பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். இவரது சுகாதார சேவையை பார்த்து தான் ஆந்திரா, தெலுங்கானாவில் ஆரோக்கிய ஸ்ரீ என்ற சுகாதார திட்டம் கொண்டுவரப்பட்டது.

 ஸ்ரீ சத்ய சாய்பாபா என்றால் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய வெளிச்சம், தன்னம்பிக்கை, தைரியம், கடவுள், பக்தி, தந்தை, சாந்தி. இவ்வுலகில் சூரியன் சந்திரன் இருக்கும் வரை, பகவான் சத்திய சாய்பாபாவின் புகழ் நிலைத்து நிற்கும்.


ஆதாரம்: 23-11-2022 அன்று வெளிவந்த தினமலர் செய்தி



1 கருத்து: