தலைப்பு

செவ்வாய், 8 நவம்பர், 2022

இடர் பொறுத்த ஸ்ரீ சத்யசாயி இறைவன்!

இறைவன் பேரவதாரமாக இறங்கி வருகையில் மனித தேகத்தையே உடுத்திக் கொள்கிறார்.. அந்த தேகத்திற்கான எல்லா அசௌகர்யங்களையும் மனிதனைப் போல் அன்றி பேரவதாரங்கள் புலம்புவதோ, அலுத்துக் கொள்வதே, கலங்குவதோ இல்லை என்பதற்கான மிகப் பெரிய உதாரணம் உன்னதப் பதிவாக இதோ...!


1973ல் பாபா (பெங்களூர்)ஒயிட் பீல்டில் தங்கியிருந்தபோது ஜுரம் காரணமாக சில நாட்ககள் வெளியே தரிசனம் தர வராமலே இருந்தார். பிறகு தரிசனம் தர வந்த தினத்தில் டாக்டர் கோகக் "ஸ்வாமி ஜுரம்

முற்றும் குணமாகிவிட்டதா?" என்று வினவினார்.

அதற்கு ஸ்வாமி "ஜுரம் ஒரு பெரிய விஷயமில்லை. உண்மை உபாதையை இதுவரை நான் சொல்லவில்லை. சென்னையிலிருந்து நான் புறப்படுகையில் கார் கதவை, சாத்தியபோது என் பாதம் அதில் மாட்டிக்கொண்டு நன்றாக நசுங்கிவிட்டது. அது உடன் வந்தவர்களுக்கு தெரியாமல் கார் ஸ்டார்ட் ஆகிற ஓசையிலேயே நான் கார் கதவை மறுபடி திறந்து, காலை இழுத்துக்கொண்டு மூடினேன். அந்த ரணத்துக்காகத்தான் ஜுரம் கண்டுவிட்டது. பக்தர்களை ஏமாற்றாமல்

தரிசனத்துக்குக்கூட தினமும் வெளியே வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் காலைதொட்டுதொட்டு வலியை நான் வெளியே காட்டுமாறு செய்துவிடப்போகிறர்களே என்றுதான் சில நாளாக உள்ளேயே இருந்தேன். இந்த நீள கஃப்னியால் எத்தனை செளகரியம் பாருங்கள். இங்கே கூடவே இருப்பவர்களுக்கும் என் பாதமோ, அது நசுங்கியுள்ள விகாரமோ தெரியவே இல்லை. இதோ பாருங்கள் "என்று அம்புஜ பாதத்தை நீட்டினார்.

ஐயோ! கல்லால் அடித்த அம்புஜமாக வதங்கியிருக்கிறது. வாதை ஸ்வாமிக்கு பொருட்டில்லாவிட்டாலும், அதை மற்றவர் அறிந்து மனஉபாதைப்படுவதை பொருட்டாகக் கொண்டு வெளியில் சொல்லாமலே இருந்திருக்கிறார்.


🌹 இடர்களைந்த ஈசன்:

கோக்குடன் சென்றிருந்த பிரபு பிரசாத் "அது சரி ஸ்வாமி" என்று ஆரம்பிக்கும் போதே "புட்டபர்த்தி குரு பூா்ணிமைதானே ! அது மற்றவர்களின் துயரத்தைப் பற்றிய விஷயம் என்று குளுமையாகக் கூறினார்.

பிரபு பிரசாத் நெக்குருகினர். குரு பூா்ணிமைக்கு இவர் குடும்பத்தோடு பர்த்தி சென்றபோது இவரது மூன்று வயது பிள்ளையின் கையை வைத்தே யாரோ காரின் கதவை அறைந்து சாத்திவிட்டனர். "ஸாயிராம்" என்று துடி துடித்துக்கொண்டு கதவை திறந்து அந்த கையை எடுத்துப்பார்த்தார். சட்னியாகியிருக்க வேண்டிய கை சிறு புண்ணும் படாமல் நலமாக இருந்தது.


ஆதாரம்: ரா கணபதி எழுதிய "ஸ்வாமி" / அத்தியாயம் 28

தொகுத்தளித்தவர்: -ஹரிஹரன், கேகே நகா் சமிதி


🌻இறைவன் பாபா மனித குலத்திற்காகவே வந்தவர்... இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா இறைவன் அவர்! அவர் வாழ்க்கைப் பாதை முழுக்க உயர் தியாகமே பரந்து விரிந்திருக்கிறது... ஆக பாபா பக்தர்களாகிய நாமும் ஆணவ ஆசைகளற்ற தியாகிகளாக திகழ வேண்டும்! எப்பேர்ப்பட்ட சங்கடங்கள், துயரங்கள், கசப்புகள், இழப்புகள் நமக்கு நேர்ந்தாலும் "யாவும் சுவாமி சங்கல்பம்" என கடந்து போக வேண்டும்! அதுவே தியாக வாழ்வு! தியாக வாழ்வே பரிபூரண யோக வாழ்வு! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக