தலைப்பு

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

ஸ்ரீ பிரேம சாயிக்காக காத்திருக்கும் TVS வேணு சீனிவாசன்!


TVS மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனுக்கும் பேரிறைவன் பாபாவுக்கும் நிகழ்ந்த ஒரு முக்கியமான உரையாடல்! அவர் எந்த விதத்தில் பாபாவின் பௌதீக மறைவை தாங்கிக் கொண்டார் என்பதற்கான பதிலில் ஒரு பேராச்சர்யமே நிறைந்திருக்கிறது! அந்த ஆச்சர்யத்தில் ஒரு பேருண்மை நம் அனைவர் இதயங்களிலும் ரீங்கரித்தபடியே இருக்கப் போகிறது இதோ...!

வேணு: சுவாமி.. அவதாரம் பூமியில் இருக்கும் போது, அவரைக் காண்பது, அவருடன் அருகில் இருப்பது... இது எல்லாமே நிகழ்வது பாக்கியம் தானே சுவாமி.

பாபா: ஆம் பாக்கியம் தான். 
"பிரேம சாயி வரும் போது என் கூடவே இருப்ப"

வேணு: "சுவாமி... இந்த முறை மாதிரி இல்லை தானே சுவாமி."
மீண்டும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன், "சுவாமி, இந்த முறை மாதிரி இல்லாமல், அதாவது நான் உங்களிடம் தாமதமாக வந்தது போல இல்லாமல்.. ஆரம்பத்திலிருந்து முடிவுவரை... பிரேம சாயி வரும் போது, நான் அவரைப் பார்க்க வேண்டும், இறுதி வரை அவரோடு இருக்க வேண்டும. 

பாபா: "கட்டாயம், கட்டாயம், கட்டாயம்," என்றார்.

வேணு: அதனால் தான் சுவாமியின் உடல் பிரிவைத் தாங்கும் வலிமை எனக்குக் கிடைத்தது. அந்த உறுதியை அவர் ஒருமுறை அல்ல, மூன்று முறை அளித்தார்.

ஆதாரம்: TVS வேணு சீனிவாசன் அவர்களின் SSSMC நேர்காணல்


‼️ வரப்போகிற இறுதி சாயி அவதாரமான ஸ்ரீ பிரேம சாயி அவதாரம் பற்றி A to Z உணர்ந்து கொள்ள கீழே இருக்கிற link'கை Click செய்யவும்! 
👇👇


(அல்லது) 
யூட்யூபில் 
PREMA SAI BABA SAI YUGAM 
என்று சர்ச் செய்து வீடியோ பார்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக