நெஞ்சத்தைப் பதற வைக்கும் வயநாடு இயற்கைப் பேரிடர். இதுவரை 300+ இன்னுயிர்கள் இழப்பு!!
இன்னும் தொடரலாம் என்னும் அச்சம்.
உயிர் துறந்த ஜீவன்களின் ஆன்மாக்களை இறைவா உன் அடி சேர்த்து அமைதி ஆக்குவாய்!
இழந்து தவிக்கும் உற்றார் உறவினர்களின் சோகம் போக்கி மனம் தேற்றுவாய்.
இன்னும் மீட்கப்படாதவரை பத்திரமாய் மீட்டெடுப்பாய்! மீட்கப் பட்டவரை மனம் உடல் தேற்றி காத்து ரட்சிப்பாய்! என்று நாம் அனைவரும் பேரிறேவன் பாபாவிடம் மனமார பிரார்த்திப்போம். மனம் உருகி நாம் செய்ய இருக்கும் இந்தத் கூட்டுப் பிரார்த்தனையை பகவான் பாபா ஏற்று தயை புரியட்டும்!
⏰ இன்றும், இன்னும் சில நாட்களும் மீட்புப் பணி முடியும் வரையிலும் தினமும் இரவு 8.30 மணிக்கு காயத்ரி மந்திரம் 21 முறை ஜெபித்து பேரிறைவன் பாபாவை வழிபட்டு வேண்டுவோம்.
(இயலாதவர்கள் தங்களால் முடிந்த நேரத்தில் கூட பிரார்த்தனை செய்யலாம்)
இந்தக் கடினமான நேரத்தில் கரம் கோர்த்து, தமது நலன்களைக் கூட பாராமல், மீட்பு சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பகவானின் கருணை பாதுகாப்பு ரட்சையாக அமையட்டும்!!
ஓம் ஸ்ரீ சாய்ராம்.
தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம்
Sure prayer sairam for all
பதிலளிநீக்கு