தலைப்பு

செவ்வாய், 9 ஜனவரி, 2024

தன்னிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும்? - பாபா


தன்னிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டுமென அறிவுறுத்தி பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு 1960 புத்தாண்டு அன்று பாபா ஆங்கிலத்தில் எழுதியருளிய பிரார்த்தனை மடல் (தமிழாக்கம்)

என் மீது அருளைப் பொழிவதற்கு உன்னைவிட அன்பானவன் வேறு யாருமில்லை என திடமாக நம்புகிறேன்

நான் உன் தாமரைப் பாதத்தில் பணிந்திருப்பதன் காரணம் இதுவல்லவோ ஐயனே சொல்!


நான் பிரார்த்தனை செய்து மன்றாடும் போது நீ விரைந்து காத்தருள்வாய் என திடமாக நம்புகிறேன்

நான் உனக்காகக் கரைந்துருகி கண்ணீர் வடிப்பதன் காரணம் இதுவல்லவோ ஐயனே சொல்!


நீ எப்போதும் என்னுடனேயே இருந்து எனக்கு நல்வழி காட்டுகிறாய் என திடமாக நம்புகிறேன்

நான் இரவுபகலாக உன்னுடையவனாகவே இருப்பதன் காரணம் இதுவல்லவோ ஐயனே சொல்!


நான் எதைக் கேட்டாலும் உன்னால் 'இல்லை' எனச் சொல்ல முடியாது என திடமாக நம்புகிறேன்

உன் கருணைக் கடைக்கண்பார்வை என் மீது விழாதா என ஏங்குவதன் காரணம் இதுவல்லவோ ஐயனே சொல்!


இந்த முறை எனக்காக என்ன திட்டமிட்டு வைத்திருக்கிறாய்?

வரங்களை அருள்வதற்கு ஏன் இந்த கடும் தாமதம்?

நீ என்னை எவ்வளவு நேரம் காக்க வைத்தாலும், அழுது புலம்ப வைத்தாலும், உன்னை விட்டு விலகமாட்டேன்.

உன் ப்ரேமை பொழியும் பார்வை என் மீது திரும்பும்வரை நான் அசையாமல் நின்று கொண்டே இருப்பேன்.


" I firmly believe there is none kinder than

You,

to shower Grace on me.

Tell me, is this not the reason why

I am at your Lotus Feet?


I firmly believe You will respond quick

when I do pray and plead.

Tell me, is this the reason why

I am crying aloud for you?


I firmly believe You are ever beside me

to guide my steps aright.

Tell me, is this not the reason why

I am Yours thro' day and night.


I firmly believe You can never say 'No'

Whatever I ask from You.

Tell me, is this the reason why

I long for a glance from You?


What have you designed for me this time?

Why this dire delay to offer boons?

However long you make me wait and wail

I will not leave, I'll be standing still

Until your loving eyes do turn on me.

ஆதாரம்: Prayer written by Baba and given to Kasturi, New year's Day, 1960


பின்குறிப்பு:

“கஸ்தூரி, மேற்கண்ட பிரார்த்தனையுடன் புத்தாண்டைத் தொடங்கு. அருளும் ஆசிகளும் அபரிமிதமாகப் பொழியும்!”

“நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று, குழந்தைகள், பேரக்குழந்தைகள், நண்பர்கள் சூழ்ந்திருக்க, பக்தி-ஞானத்தின் மூலம் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிரு. அனைவருக்கும் ஈசனான சர்வேஸ்வரனின் சேவையிலேயே உன்னுடைய வாழ்நாள் கழியட்டும் என ஆசீர்வதிக்கிறேன். உன்னுடைய வாழ்க்கையை அளவற்ற சாந்தியிலும் சந்தோஷத்திலும் கழித்துக் கொண்டிருப்பாயாக!” - பாபா


நன்றி: முரளி சாய்ராம், சேலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக