தலைப்பு

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பிரம்மாண்ட மாநாட்டு மையம் - பர்த்தி மணி மகுடத்தில் மற்றும் ஒரு வைரக்கல்!


கட்டிட கலையின் அற்புத பரிமாணங்களை உலகமே வியக்கும் வண்ணம் பர்த்தியில் உருவாக்கினார் பாபா. சாயி குல்வந்த் ஹால், யஜுர் மந்திர், பல்கலைக் கழக கட்டிடம், கோள் அரங்கம், சைதன்யஜோதி, இதற்கெல்லாம் மணி மகுடமான அதி சிறப்பு மருத்துவமனை. பர்த்தி பாபாவின் சங்கல்பத்தால் இவை அனைத்தும் அற்புதமாக வடிவமைக்க பெற்று, ஆன்மீகக் கட்டிட கலை என்ற  தனிப் பிரிவாகவே பிரகாசிக்கின்றன.



56,500 சதுர அடி பரப்பு - 1300 பேர்கள் அமரும் அரங்கங்கள்:

இந்த வகையில் பகவானின் அருளாசியுடன், பர்த்தியில் புதிதாக இடம் பெறப் போவது, ஒரு பிரம்மாண்ட  உலக மாநாட்டு மையம், (Global Convention Center.) இதை  ஸ்ரீசத்ய சாயி பன்னாட்டு நிறுவனம் (SSSIO)  , வெளிநாட்டு பக்தர்களின் நிகழ்ச்சிகளை நடத்த ஒரு களமாக அமைக்கத் திட்டமிட்டனர். ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்குழு இதை பரிசீலித்து, அனைத்து சாய் பக்தர்களும் இந்த மாநாட்டு மையத்தை உபயோகிக்கும்படி  அமையுமாறு இருக்கவேணடும் என்று கருதினர். அதற்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டது. சில வல்லுனர்கள் பல இடங்களிலுள்ள மாநாட்டு  அரங்கங்களை பார்வையிட்டு இத்தகைய அரங்கங்களின் வடிவமைப்பை ஆராய்ந்தனர்.


 2018 அக்டோபர் 30ம் நாள் , பாபாவின் திருவருள் வழி காட்டுதல்படி, அரங்கக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்யப்பட்டது. பகவான் அருளால் நிறைவை நோக்கி நடைபோடுகிறது. 


மாநாட்டு மையத்தின் சிறப்பு அம்சங்கள்:

1. மாநாட்டு மையத்தின் கட்டிட பரப்பளவு 56, 500 சதுர அடி.

2.   பெரிதும் சிறிதுமான இரண்டு அரங்குகள். 1000 +300 இருக்கைகள். மொத்த இருக்கைகள் 1300.

3. அரங்குகளின் உள்ளே மிகப் பெரிய இரு மேடைகள். 90×50 மற்றும் 90×30  அடி விஸ்தீரணத்துடன் அமைக்கப்பட்டு ,விளக்க கூட்டங்கள் இசைக் கச்சேரிகள் மற்றும் இசைக் கருவிகளின் இன்னிசை போன்ற பல்வகை நிகழ்ச்சிகளும் நடைபெற சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அமரும் இருக்கைகள் நேராகவும் சுகமாகவும் அமர்ந்து உடல் நலம் காக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.

4. இரண்டு பேச்சு அரங்குகள்-100 பேர் உட்காரும் வசதியுடன்.

5. மைய குளிர்பதன அமைப்பு

6. அதி நவீன ஒலி அமைப்புகள்

7. L.E.D. திரைகள்

8. கலைநயமும் , திறனுடனும் கூடிய நவீன விளக்கொளி அமைப்புகள். மின்சாரம் தடைபடாமல் இயங்க மாற்று சாதனங்கள். மேற்கூரையில் அமைந்த சூரிய ஒளி மின்சார அமைப்பு.

9. முன்புறம் அமைந்த செயற்கை நீர்ப்படுகை.

10. விஸ்தார நடைவழி. தீ அணைப்பு வசதிகள். அழகிய இயற்கை அழகுடன் கூடிய தோட்டம்.

11. பாபாவின் பொன்மொழிகள் பதித்த பலகைகள்.

இத்தனை சிறப்பும் கலைநயமும் கொண்ட இந்த மையத்தை பாபா ஆசீர்வதிக்குமாறு ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக் கட்டளை பிரார்த்தித்து, சாய் சகோதர சகோதரிகள் இந்த மையத்தில் தங்கள் ஆன்மீக நிகழ்வுகளை நிகழ்த்தி பயன்பெற வேண்டும் என வேண்டிக்  கேட்டுக் கொள்கிறது.

ஆதாரம்: SriSathyaSai.org

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக