தலைப்பு

சனி, 10 அக்டோபர், 2026

பாரத ரத்னா ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


இப்படி ஒரு தலைவர் இப்போது இல்லையே எனும் ஏக்கத்தையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிட்டுப் போனவர். லோக் நாயக்(மக்கள் தலைவன்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. ஜெய்பிரகாஷ் நாராயண். இவருக்கு கிடைத்த சத்யசாயி அனுபவங்களைக் காண்போம், இதோ...


முதலில், இன்றைய இளைய தலைமுறையினர் JP (திரு. ஜெய்பிரகாஷ் நாராயண்) பற்றி அறிந்து கொள்ள சில முக்கியக் குறிப்புகள்!

ஜே.பி (ஜெயப்ரகாஷ் நாராயண்)
    
1902ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாள், பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த வங்காள மாகாணத்தில் பிறந்த இவர், செவ்வனே தொடக்கக் கல்வி கற்று… மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று அங்கே பொருளாதாரம் கற்றார். பின்னர் இந்தியா இந்திய திரும்பி சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியோடு பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம் ..‌. வெள்ளையனே வெளியேறு போன்ற அறப்போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகி இவர். இந்தப் போராட்டங்களினால் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்த இவரைப்  பிடித்துக் கொடுப்பவர்க்கு… அப்போதே 10,000 ரூபாய் விலை வைத்திருந்தது வெள்ளையர் அரசு. எனவே மீண்டும் சிறைப்பட்டு சித்திரவதை அனுபவித்தார்.

    
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மஹாத்மா காந்தி அவர்கள் பரிந்துரைத்தும் பதவிகள் மறுத்தவர்  ஜே.பி. தனக்கு பிறகு ஜே.பி தான் ஆள வேண்டும் என்றார்  நேரு.. அதற்கும் மறுப்பு தெரிவித்தார் ஜே.பி! பொதுமக்களோடு கலந்து இருப்பதே ஜனநாயகம் என்ற கொள்கையில் இருந்த இவர்  இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸியில் பாதுகாப்பு சட்டத்தில் முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
ஜே.பி - ஜவஹர்லால் நேருவுடன்


ஜே.பியின் சேவை மனம் தான் பகவான்  ஸ்ரீ சத்ய சாயி பாபாவிடம் பக்தராக்குகிறது ."பாபா.. நான் அதிக நாட்கள் இருக்கமாட்டேன்.. அதற்காக நான் ஆசைப்படவில்லை. ஆனால் இருக்கும் வரை சிரமப்படாமல் இருக்க வேண்டும்" என்று தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது  பாபாவிடம் நேரடியாகக் கூறி வேண்டும் வாய்ப்பு பெற்றவர் ஜே.பி. 
1970களில் பகவான் பாபா 
         
    






















1970களில் சுவாமியை ஜே.பி முதல்முறையாக தரிசித்தார். அந்த சமயத்தில் தான் அவர் ஜஸ்லோக் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தார். அந்த முதல் தரிசனபாக்கியத்தை, ஜே.பியின் மனைவி பிரபாவதி தேவி அம்மையார் பின்வருமாறு விளக்குகிறார்.... 

 “நாங்கள் இருவரும் ராய் பகதூர் ஸோனால்ஜியை பார்க்கப் போனோம். அங்கு பகவான் பாபாவை தரிசித்தோம். அவருடைய திருமுகத்தில் ஒரு தெய்வீகப் பிரகாசம் இருந்தது.. கண்கள் அபூர்வமான ஒளியைச் சிந்தின... அந்த தரிசனம் மன ஆறுதல் தந்தது! "


ஜே.பி தன் துணைவியார்  பிரபாவதி தேவியுடன்... ( ஆரம்பகால புகைப்படம்) 

    பாபா,  சுவாமி ஜே.பியை ஆசீர்வதித்து "அன்பு.. சேவை.. உண்மை இந்த மூன்றும் தான் கடவுளின் வடிவங்கள்" என்றார். அதைக்கேட்ட ஜே.பி.  தனது எண்ணங்களி ஒத்தே பாபாவின் உபதேசமும் இறப்பது கண்டு மிகவும் மகிழ்கிறார். அதன் பின்னர், பல வருடங்கள் பாபாவின் உபதேசத்தை மனதில் சுமந்தபடி  நம்  தேசத்திற்கு ஒரு சிறந்த தலைவராக செயலாற்றினார்.



காலம் உருண்டோடி  வயோதிகம் உடல் தளர்த்திய  ஜே.பியை சந்திக்க சுவாமியே நேரில் சென்றார். தன பக்தரை தேடி பாபாவே சென்றபோது… "தாங்கள் ஏன் சிரமப்பட்டீர்கள் சுவாமி... நானே தங்களிடம் வந்து ஆசி பெற விரும்பினேன்.. ஆனால் முடியவில்லை" எனக் கூறி பக்தியுடன் பணிந்தார்.


    அதற்கு சுவாமியோ... "உங்கள் ஆர்வம் புரிந்தது... அதனால் தான் நானே வந்துவிட்டேன்... என்னை பார்க்க முடியவில்லையே என்ற வேதனை உங்களுக்கு இருக்க வேண்டாம்... உங்களிடம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி... ஏனென்றால் நீங்கள் எளிய மக்களிடம் அன்பு காட்டுகிறீர்கள்" என்று  கருணையுடன் கூறினார் பாபா. அச்சமயம் ஜே.பி எழுந்து நிற்க முயல்கிறார்….கால்களோ வீங்கி  இருந்தபடியால் முடியவில்லை! சுவாமி தனது கையை உயர்த்தி ஆசீர்வதித்து அங்கை அசைப்பில்  விபூதி வரவழைத்து சுவாமியே  தனது திருக்கரங்களால் ஜே.பி-யின் கால்களில் தடவி விட்டார்.

அந்த செயலைக் கண்டு துடித்துப் போகிறார் ஜே.பி. அனால் சுவாமியோ புன்னகையுடன் "எல்லாம் சரியாகிவிடும்.. கவலைப்படாதீர்கள்" என்று ஆசீர்வதிக்கிறார். தனது கால்களை பகவான் தொட்டுவிட்டாரே என்று  ஜே‌.பி மிகவும் சங்கடப் பட்டார். சுவாமி புரிந்த இந்தப் பெருங்கருணைக்கு தான் தகுதியற்றவன் என்று எண்ணமிட்டு… கண்கள்  கலங்கியபடியே சுவாமியின் கைகளைப் பிடித்து"சுவாமி! தாங்கள் இப்படி செய்துவிட்டீர்களே... தயவு செய்து என்னை இப்படி ஒரு அபச்சாரத்திற்கு ஆளாக்காதீர்கள்!" என்று உருகினார்.




    நல்ல மனிதர்.. நேர்மையான அரசியல்வாதி…  என்று ஸ்ரீ சத்யசாயி பாபாவின் திருவாயால் பாராட்டுப் பெற்றவர் ஜே‌.பி. அவருடன் அவரது பெட்டியில், சுவாமி பம்பாயில் அவருக்கு சிருஷ்டித்து தந்த பதக்கத்தோடு கூடிய சங்கிலியும், மோதிரமும் எப்போதும் வைத்திருப்பார். அவரின் கொளகைப்படி அவர் தங்கம் அணிவதில்லை என்றாலும்  தினமும் படுக்கை அறையில் தூங்குவதற்கு முன் அவற்றைக் கண்களில் ஒற்றி தலையணைக்கு அடியில் வைத்தே உறங்குவார்.

      

    மதச்சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவரான ஜே.பி இரண்டே இரண்டு படங்களைத்தான் தனது இல்லத்தில் மாட்டி வைத்திருந்தார்.. ஒன்று மா ஆனந்தமயி புகைப்படம் (இந்த யோகினி, பகவான்  ஸ்ரீ சத்யா சாயி பாபா, சாட்சாத் கிருஷ்ணாவதாரம் என்று பிரகடனம் செய்தவர்).  இன்னொரு புகைப்படம் ஸ்ரீ சத்ய சாயி பாபாவினுடையது!  தனது படுக்கை அறையின் தலைமாட்டில் அதை மாட்டி வைத்திருந்தார். சுவாமியின் புகைப்படத்தை தரிசித்து விட்டுத்தான் உறங்கச் செல்வார்.


    அவர் எந்த அளவிற்கு சுவாமியின் அந்தப் படத்தை நேசித்து வழிபட்டார் என்பதற்கு சிறிய உதாரண சம்பவம். ஒருமுறை அவரின் வீட்டில் வெள்ளையடிக்கும் பணி நடந்து கொண்டிருந்ததால் விஸ்வநாத் என்கிற அவரது வீட்டுப் பணியாளர், அந்தப் படத்தை பாதுகாப்பாக பரண் மேல் வைத்திருந்தார்.  வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்த ஜே.பி, சுவாமி படம் அந்த இடத்தில் இல்லாததைக் கண்டு  பதைபதைத்துப் போனார்!  வீடெல்லாம் தேடினார! பின்னர் விஷயம் கேள்வியுற்று அதனை எடுத்து அதே இடத்தில் மாட்டிய பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

பாபாவைப் பற்றி அவர் குறிப்பிடும்போது "உலகத்தில் உள்ள மக்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று அவர்களை ஆட்டிவைக்கிறது. அந்த சக்தியை நாம் பார்க்க முடியாது. ஆனால் அது இருப்பதை உணரலாம். அந்த சக்தியை,  மக்களிடையே நடமாடி அருள் பொழியும் மனித உருவத்திலும் நான் கண்டிருக்கிறேன்" என்றார்  ஜே.பி.


பக்தர் பாதத்தை பரப்பிரம்மம் தொடுவதென்பது எப்பேற்பட்ட அதிசய நிகழ்வு! அந்த அதிசயம்   லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணுக்கு நேர்ந்தது! பாபாவின் கருணையை மெச்சுவதா? அந்தக் கருணைக்குப் பாத்திரமான ஜே.பி. எனும் தூய தலைவரை மெச்சுவதா?


(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 29 / ஆசிரியர்: எஸ்.லட்சுமி சுப்ரமணியம்)



🔥தேசத் தலைவர் ஜெய பிரகாஷ் நாராயண் அவர்களின் நினைவாக இந்திய அரசு  செய்தவை:



>இப்போது பிஹார் தலைநகர் பாட்னாவில் இயங்கிவரும் சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெயபிரகாஷ் நாராயண் பெயரையே அரசு சூட்டி கௌரவித்திருக்கிறது.

>நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" உட்பட பல விருதுகளை கொடுத்து  கௌரவம் செய்திருக்கிறது.

>சப்ரா டெல்லி வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜே.பியின் பெயரிலேயே இயக்கப்படுகிறது.

>பிஹார் கங்கை நதியோடு கூடிய ரயில் இணைப்புப் பாலமாகிய டிக்ஹா -- சோன்புர் பாலம் ஜே.பியின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

>பெங்களூர் மற்றும் மைசூரில் ஒரு குடியிருப்பு பகுதி JP நகர் (ஜெயபிரகாஷ் நாராயண் நகர்) என்று அழைப்படுகின்றது... 

>அஞ்சல் தலை  மற்றும்  இரண்டு ரூபாய் காயின்களில் ஜே.பி யின் உருவம் பதித்து அச்சிடப்பட்டுள்ளது..

> ஜே.பியை "லோக் நாயக்" என்றே மக்கள் அன்போடு அழைப்பார்கள்.. அதைக் கொண்டாடும் விதமாக புதுடெல்லியில் லோக் நாயக் மருத்துவமனை இயங்கி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக