பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் மகிமைகள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை!குறிப்பாக பாபாவின் முதன்மையான மகிமையாகிய அவரின் உபதேச மொழிகள், அன்பெனும் உன்னத மொழியை அடிப்படையாகக் கொண்ட போதிலும் பாபாவின் பிறந்த தேசத்து மொழியாகிய சுந்தரத் தெலுங்கில் வழங்கப்பட்டது! பாபா வழங்கிய அவரது தெய்வீகப் பேருரைகளையும், அவரால் நிகழ்ந்த மகிமை சம்பவங்களையும் தமிழ் உட்பட பலநூறு மொழிகளில் மொழிபெயர்த்து சேவையாற்றியுள்ளனர் மூத்த சாயி பக்தர்கள். அந்த வகையில், ஒரு நவீன முயற்சியாக... பாபாவின் மகிமைகளை, அருளுரைகளை, கொஞ்சும் தமிழில்... கவிதை நடையில்... வழங்கும் தொடர் இது! பாபா வழங்கிய தெய்வீக வழிகாட்டல்களின் சாரம் குன்றாமல், மகிமைகள் சுவாரஸ்யம் குலைவுறாமல்... தமிழமுதத் தேன் சேர்த்து அழகு நடையில் வழங்குகிறது இந்தத் தொடர்!
வழங்குபவர்: கவிஞர் குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
சொல்லமுது 1 : பாபா பரிவுடன் போதிக்கும் மூன்று வகை சாதனா மார்க்கங்கள்
( மூலம்: Summer Shower /May 30 1973)
...............
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்கிறார் திருமூலர்.
ஐம் புலக் கள்வர் அகத்தில்
புகும்போது அகத்தில் நீ
இல்லையோ அருணாசலா! என்கிறார் பகவான் ரமணர்
நம் உள்ளத்தில் உதிக்கும்
எண்ணங்கள் நம்மைத் தாயாகவும் உயர்த்தலாம்
பேயாகவும் ஆட்டி வைக்கலாம்.
...............
நாம் அசைவற்ற
மனம் பெறுவது எப்படி?
பகவான் பாபா காட்டும் அற்புத வழிகள் என்ன?
...............
பாபா போதிக்கும் சாதனா மார்க்கங்கள்!
அலைபாயும் மனதடங்க, அன்பரசர் சாயீசர் மூவகை சாதனா மார்க்கங்களை கற்பிக்கிறார்.
அவை பின்வருமாறு
........
1.*மச்ய(மீன்) சாதனா*
எப்படி ஒரு மீன் நீரில் மட்டும் ஜீவிக்க இயலுமோ,
அதுபோல இந்த வகை சாதனை,
தனிமையில் மட்டுமே செய்ய இயலும்.
குழுக்களாக இதை சேர்ந்து பயில இயலாது.
தனிமையே இனிமை என்பது தான் மச்ய சாதனையின் இயல்பு
...........
2.*மிருக சாதனா*
இவ்வகை சாதனைகள்
ஒரு குழுக்களாக இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை
தனிமையில் இதை மேற்கொண்டால் கவனம் சிதறி,
சாதனைகள் கைகூடாத நிலை ஏற்படும்
...........
3.*கூர்ம(ஆமை) சாதனா*
எப்படி ஆமை தரையிலும் தண்ணீரிலும்
எவ்வித சிரமமும் இன்றி வாழ்கிறதோ,
அதுபோல இந்த சாதனையாளர்கள்,
சூழ்நிலையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள்.
தனிமையோ கூட்டமோ, அவர்களின் சாதனை இடையூறின்றி தொடரும்.
ஆகவே சம நிலையில் மனதை வைத்திருந்தால்,
அது அசைவற்று நிலைத்து நிற்கும்
......
ஜெய் சாய்ராம்!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக