அனந்தன் இருக்கும்
இடமெல்லாம்
ஆதிசேஷன் இருப்பார்..
படுத்தால் பாயாக,
நின்றால் குடையாக...
சத்ய நாராயணன் தம்மை
சாயி என அறிவித்த இடம் உரவகொண்டா..
நாகமலை எனத் தமிழில் கூறலாம்.
அவதாரரைப் பிரியமுடியாத
ஆதிசேஷன் குன்றாக இங்கு
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் சரித்திரத்தின் தொடக்கப் புள்ளியான உரவகொண்டா
புட்டபர்த்தி திருத்தலத்தின் வடமேற்கு திசையில் 125 கி.ம மீ தூரத்தில் அமைந்துள்ளது.
🌸 சத்யமே சாயி:
கள்ளம் கபடமற்ற 14 வயது சிறுவன் சத்ய நாராயணன் பள்ளிப் படிப்பைத் தொடர, அண்ணன் சேஷமராஜு ஆசிரியராகப் பணி ஆற்றிய உரவகொண்டா செல்கிறார். சில காலம் பள்ளியில் பயின்றவர், திடீரென ஒரு நாள் தமது புத்தகங்களை வீட்டில் வீசி எறிந்து விட்டு நான் உங்களுக்கானவன் அல்ல உலகுக்கானவன்
என்று கூறி... தம்மேல் அன்பு
வைத்திருந்த ஆஞ்சனேயலு என்பவரின் தோட்டத்தில் ஒரு கல்லின் மேல் அமர்ந்து
தமது அவதார நோக்கத்தை எடுத்துரைத்து அங்கு குழுமி இருந்த மக்களிடையே அவர் பாடிய பஜன் தான் "மானச பஜரே... குரு சரணம்"
அவர் அமர்ந்த பாக்கியம் பெற்ற அந்தக் கல்லின் மேல், பாபாவின் பளிங்குக் சிலை ஒன்று கவினுற அமைக்கப்பட்டு
அனைவராலும் பக்திப் பரவசத்துடன் வணங்கப்படுகிறது.
கவர்ந்திழுக்கிறது.
தொகுத்தளித்தவர்: திரு.குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக