ஸ்ரீ சத்ய சாயி பாபா மகா சமாதியான (2011'க்கு) பிறகு ஒரு வருடம் கடந்து கர்நாடகா- மாண்டியாவில் ஸ்ரீ பிரேம சாயி பாபாவாக அவதரிப்பார் என ஸ்ரீ சத்ய சாயி பாபாவே பல முறை பல இடங்களில் அறிவித்திருந்தும் கூட பலர்/பல போலி பிரேம சாயி'களை நம்பி தேடிப் போவது சாயி வழிக்கே முரணானது! இதை ஒரு முழு நீள காணொளியாகவும் (Documentry) ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் ஆதாரப்பூர்வமாக வழங்கி இருக்கிறோம்!
(Link below)
👇 👇
நம் கண் முன்னர் தெரிந்தே ஏமாறும் அப்பாவி பக்தர்கள் பாவம் செய்வதில் இருந்து தடுத்துக் காப்பாற்றுவதும் சாயி சேவையே!
வெறும் விபூதி / குங்குமம் / சிலைகள் தருகிறவர்கள் எல்லாம் பூஜாரியே தவிர ஸ்ரீ சத்ய சாயி பாபாவாகி விட முடியாது என்ற அடிப்படை ஆன்மீகப் புரிதல் இல்லாமல் இருப்பதை தெளிந்த விழிப்புணர்வு வருவதற்காக இன்னொரு முறை சுட்டிக் காட்டி, தாராபுரத்தில் தானே பிரேம சாயி என்று பல அப்பாவி பக்தர்களை ஏமாற்றி வரும் அந்த இளைஞன் செப்டம்பர் 02 2024 ஆம் தேதி அன்று பிரசாந்தி நிலையத்தில் பிரசாந்தி நிலைய சேவாதள தொண்டர்கள் மூலம் பிடிபட்டான்! பிறகு அவனை தலைமை செக்யூரிட்டி அலுவலகத்திற்கு கொண்டு சென்று வார்னிங் கொடுத்து துரத்தப்பட்டிருக்கிறான்! இனி இது போன்ற போலி ஆசாமிகளை ஆசிரமத்திற்குள் அனுமதிக்கவே கூடாது என்று கறாராகவும் கண்டிப்பாகவும் பேசி வெளியேற்றி இருக்கிறார்கள்!! இது மிகவும் வரவேற்கத்தக்கது!
தங்களது சாயி சேவையை சிறப்புடன் செய்த சேவாதள உறுப்பினர்களை வெகுவாக பாராட்டுகிறது ஸ்ரீ சத்ய சாயி யுகம்!
அந்த தாராபுரம் போலி இளைஞனின் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சிலர் ஒரு சிலரது வாட்ஸ் அப் நம்பருக்கு அவனை பற்றிய உண்மைக்கும் முரணான தகவல்களை எல்லாம் அனுப்பி ஒரு சிலரை தொந்தரவு செய்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டோம்! அப்படி ஏதேனும் உங்களுக்கு சில செய்திகள் வந்தால், குழம்பாமல் - தடுமாறாமல் - அதிர்ச்சி அடையாமல் அதற்கு எந்தவிதமான Reaction'னும் காட்டாமல் அந்த நம்பரை BLOCK செய்து கடந்து போய்விட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது!
ஏனெனில் போலிகள் தான் தன்னை நிரூபிக்க முயற்சிகள் செய்வார்கள்! சத்தியம் என்பது நம் கண்முன்னே தெளிவாக இருக்கிற உள்ளங்கை நெல்லிக்கனி போல!
ஆகவே சக சாயி பக்தர்களே! பொறுமையோடு இருப்போம்! பாபாவே தனது பிரேம சாயி அவதாரத்தை பிரகடனப்படுத்துவார்! அது விரைவில் நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்! அதுவரை பக்தியோடு காத்திருப்போம்!
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதல்ல சாயி ஆன்மீகம்!
எந்த மலரில் தேன் இருக்கிறதென்று வண்டுக்கு தெரிவது போல் - யார் உண்மையான பிரேம சுவாமி என்று உண்மையான பக்தர் இனம் காண்பர்!
ஆம்!! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
போலிகளிடம் ஏமாறாதீர்கள்!!
அது பாபாவுக்கே செய்கிற மிகப் பெரிய துரோகம்!!
-ஸ்ரீ சத்ய சாயி யுகம்!!
ஓம் சாயிராம்
பதிலளிநீக்கு